தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாரான ‘எறும்பு’ படத்தில் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கே. எஸ். காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சார்லி பேசுகையில்…
” 2019 ஆம் ஆண்டில் இயக்குநர் சுரேஷ் என்னை சந்தித்து, ‘உங்களுக்காக ஒரு கதையை எழுதி இருக்கிறேன். ஒரே ஒரு நாள் மட்டும் வந்து நடித்துக் கொடுக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.
அப்போது நான் அவருக்கு தற்போது ஒரு திரைப்படத்தை ஓ டி டி யில் இரண்டு மாதம் வரை பார்க்கிறார்கள் என்றேன். அதன் பிறகு தான் நான் இயக்குவது குறும்படம் என விளக்கம் அளித்தார். அதன் பிறகு படப்பிடிப்பு தளம் எங்கே? எனக் கேட்க, சிதம்பரம் அருகே உள்ள அறந்தாங்கி எனும் சிறிய கிராமம் என்றார்.
என்னுடன் குழந்தை நட்சத்திரமான சக்தி ரித்விக்கும் நடித்தார். எங்களைப் பொறுத்தவரை இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் நாங்கள் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் ‘ எறும்பு’. படப்பிடிப்பின் போது ஒட்டுமொத்த கிராமமும் இயக்குநர் சுரேஷுக்கு உதவி செய்தது.
இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக கேட்ட பிறகு இயக்குநர் சுரேஷிடம் இந்த படத்தில் நடிக்கும் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் மற்றவர்களால் பாராட்டப்படுவார்கள் என்றேன்.
இந்தத் திரைப்படத்தை பொருத்தவரை சுரேஷ் தான் உண்மையான எறும்பு. அந்த எறும்பு தான்.. எங்களை எல்லாம் எறும்பாக மாற்றியது.
படத்தின் படப்பிடிப்பு 2021ல் நடைபெற்ற போது கொரோனா பிடியில் சிக்கி இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் குழந்தை நட்சத்திரமான சக்தி ரித்விக் ஆன்லைனில் பாடத்தை கற்றுக் கொண்டே நடித்தார்.
இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் மற்றவரின் பாதிப்பு இல்லாமல் தனித்துவமாக நடித்திருக்கிறார்கள். இதுதான் இதன் சிறப்பு. எறும்பு வழக்கமான படம் அல்ல உலக அரங்கில் முதல் தமிழ் சினிமா இதுதான்.
தாத்தா- தந்தை- தாய் ஆகியோரின் பெயரை...பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சூட்டியிருக்கிறார் இயக்குநர்.
தலைமுறையை மறக்காத படைப்பாளியான சுரேஷ், தன் மண்ணில் பெற்ற அனுபவத்தை எறும்பாக உருவாக்கி இருக்கிறார். இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று கவிஞர்கள், பாடலாசிரியர்கள் இங்கு வாழ்த்தியிருக்கிறார்கள். இவர்களின் வார்த்தைகளை ரசிகர்களும் முன்மொழிந்து, இப்படத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
விநியோகஸ்தர் யுவராஜ் பேசுகையில்…
‘ நாங்கள் எங்களுடைய நிறுவனம் சார்பாக வெளியிடும் முதல் திரைப்படம் ‘கருங்காப்பியம்’. இதனைத் தொடர்ந்து வெளியிடுவதற்காக காத்திருந்தபோது, இப்பட குழுவினர் அழைப்பு விடுத்தனர். நானும், என்னுடைய நண்பரும் விருப்பமின்றி இப்படத்தைப் பார்க்க தொடங்கினோம். படத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போது எனக்குத் தெரியாமல் அவரும்.. அவருக்குத் தெரியாமல் நான் நானும் அழுது கொண்டிருக்கிறோம்.
அந்த அளவிற்கு படத்தில் கலைஞர்கள் திறமையாக நடித்திருக்கிறார்கள். இந்த எறும்பு திரைப்படத்தை ஊடகவியலாளர்கள் மலையளவிற்கு பெரிது படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதற்கான தகுதி இந்த படைப்பில் இருக்கிறது. இந்தத் திரைப்படத்தை நாங்கள் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறோம். இது ஒரு ஃபீல் குட் மூவி. ” என்றார்.
‘Erumbu’ is the first Tamil movie on the world stage. Charlie is happy