தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி கமல் தன் கட்சி மற்றும் கொடி பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.
இந்நிலையில் தனது படப்பிடிப்பு பணிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் அங்கு ஹார்வர்டு பிசினஸ் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு கமல் பதிலளித்தார்.
அவற்றில் சில…
நானும் ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது எங்கள் நோக்கம்.
ஆனால் நட்பு என்பது வேறு. அரசியல் என்பது வேறு.
ரஜினியின் தேர்தல் அறிவிக்கைக்காக காத்திருப்போம். அது காவிக்கான அரசியலாக இருக்காது என நம்புகிறேன்.
தமிழகத்தில் நிதி நிர்வாகம் சரியில்லை. எந்த காரணத்துக்காகவும் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது. ஓட்டுக்கு சில ஆயிரம் பணம் வாங்கினால் பல லட்சங்களை இழக்க நேரிடும்.
மேலும் அவர் தொடர்ந்து அங்கு பேசியதாவது…
2018-ல் அரசியல் பயணத்தை தொடங்கும் நான் கிராமங்களில் இருந்து மாற்றத்தை தொடங்குகிறேன்.
நான் தேர்ந்தெடுக்கும் கிராமங்களை முன்னோடி கிராமங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளேன்.
பெரியார், காந்தி ஆகியோர் தேர்தல் அரசியலுக்கு செல்லவில்லை. ஆனால் மக்களுக்காக போராடினார்கள். தேர்தல் அரசியலை தாண்டி பெரியார், காந்தி எனது ஹீரோக்கள்.
நான் வித்தியாசமானவன் என கூறவில்லை. அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன்.” இவ்வாறு கமல் பேசினார்.
Friendship differ from Politics says Kamal about Rajini