தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கட்சி ஆரம்பிப்பேன் என அறிவித்த அன்றைய நாளிலேயே, தமிழருவி மணியனை தனது கட்சியின் மேற்பார்வையாளராக ரஜினிகாந்த் நியமனம் செய்திருந்தார்.
ரஜினி கட்சி தொடங்கிய பின், காந்திய மக்கள் இயக்கம் அதனுடன் இணைத்துக் கொள்ளப்படும் என்று தமிழருவி மணியன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில்… காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
“மீண்டும் காமராஜர் ஆட்சியைத் தமிழகம் தரிசிக்க வேண்டும் என்று என் கனவை நனவாக்கத் தொடர்ந்து முயன்றது தான் நான் செய்த ஒரே குற்றம்.
இதற்காக மலினமான மன நோயாளிகளின் தரம் தாழ்ந்த விமர்சனக் கணைகள் என் மீது வீசப்படுவதால் என் மனைவி, மக்களின் மனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விட்டன.
எந்தக் கைம்மாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோர்த்து நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடை பெற்றுக் கொள்கிறேன்.
இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்க மாட்டேன். திமுகவில் இருந்து விலகும் போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார்.
நான் போகிறேன். வரமாட்டேன்” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் தமிழருவி மணியன்.
Gandhiya Makkal Iyakkam head Tamilaruvi Manian quit electoral politics