தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குனர் என்றால் அது கௌதம் மேனன்தான்.
ரஜினி, விஜய்யை தவிர தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் அனைவரும் இவர் இயக்கத்தில் நடித்து விட்டனர்.
தற்போது விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் மற்றும் தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய இரு படங்களை இயக்கி வருகிறார்.
இவையிரண்டும் இறுதிக்கட்ட சூட்டிங்கை எட்டிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு புதிய கதையை இயக்கவுள்ளாராம்.
இதில் அனுஷ்கா நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் சில முன்னணி நாயகிகளும் இப்படத்தில் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.
கௌதம் மேனன் இயக்கிய அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்கா நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.