குணா ரீ-ரீலிசுக்கு தடை.. மோதும் கியூப் Vs பிரமிட்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

குணா ரீ-ரீலிசுக்கு தடை.. மோதும் கியூப் Vs பிரமிட்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குணா ரீ-ரீலிசுக்கு தடை.. மோதும் கியூப் Vs பிரமிட்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

குணா மறுவெளியீட்டுக்கு எதிராக கியூப் நிறுவனம் – நடவடிக்கைக்கு தயாராகும் பிரமிட் குரூப்.

சினிமா பிலிம் வடிவத்தில் திரையிடப்பட்ட போது தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தனர். பிலிம் வடிவத்தில் இருந்து டிஜிட்டல் வடிவத்தில் திரையரங்குகளில் படங்கள் திரையிட தொடங்கிய பின்பு அந்தப்படத்தின் முதலீட்டில் எந்த சம்பந்தமும் இல்லாத டிஜிட்டல் நிறுவனங்கள் அதிகாரம் செலுத்த தொடங்கின.

படத்தின் மூலப்பிரதி தயாரிப்பாளர்களிடம் இருந்தாலும் அதனை தனது டிஜிட்டல் சேமிப்பகத்தில் வைத்திருக்கும் கியூப், சோனி, டிஸ்ஆர் போன்ற நிறுவனங்கள் மூலமே திரையரங்குகளில் படத்தை திரையிட முடியும். இதனால் கியூப் நிறுவனத்திடம் முதலாளியின் உத்தரவுக்கு காத்திருக்கும் வேலையாள் நிலைமைக்கு பட முதலாளிகள், படத்தின் நெகட்டிவ் உரிமை வைத்திருப்பவர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அப்படியொரு நிலைமை நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான குணா படத்தின் திரையரங்க உரிமை வைத்திருக்கும் பிரமிட் குரூப் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கியூப் டிஜிட்டல் நிறுவனத்திற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் முயற்சியை பிரமிட் குரூப் நிறுவனம் மேற்கொண்டுள்ளதா தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாமி வரம் கொடுத்தாலும் பூஜாரி வரம் கொடுக்க விட மாட்டாரு என்பது கிராமங்களில் தினந்தோறும் பேசப்படும் பழமொழிகளில் ஒன்று. அது போன்றதொரு நிலைமை நடிகர் கமலஹாசன் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான குணா படத்தை மறுவெளியீடு செய்யும் பிரமிட் குரூப் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.

திரையரங்குகளில் டிஜிட்டல் மூலம் திரைப்படங்களை திரையிடும் தொழில்நுட்ப வசதியை கொண்டுள்ள கியூப் நிறுவனத்தால் குணா படத்தை பிரமிட் குரூப் திட்டமிட்ட அடிப்படையில் சூன் 21 ஆம் தேதி வெளியிட முடியவில்லை என்கின்றனர் தமிழ்சினிமா
வட்டாரத்தில்.

சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா.

இளையராஜா இசையமைப்பில், பாலகுமாரன் வசனத்தில், வேணு ஒளிப்பதிவில் தயாரிக்கப்பட்ட குணா படத்தில் கமல்ஹாசன், ரோஷினி,
ரேகா,ஜனகராஜ், அஜய்ரத்தினம்,
எஸ். வரலட்சுமி , கிரீஷ் கர்னாட் ,
எஸ். பி. பாலசுப்பிரமணியம்,
சரத் சக்சேனா, காகா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து ஆகியோர் நடித்துள்ளனர். வாலி எழுதிய பாடல்களை, கமல்ஹாசன், எஸ்.ஜானகி, இளையராஜா, யேசுதாஸ், ஆகியோர் பாடியுள்ளனர்.சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது.

33 வருடங்கள் கடந்த பின்னரும் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி தலைமுறை கடந்து இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களும் குணா படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வசனங்களையும், பாடல்களையும் நினைவூட்டி கொண்டாடி வருகின்றனர் என்பதற்கு சாட்சியாக உள்ளது மஞ்சு மெல் பாய்ஸ் படத்தின் வெற்றி.

மலையாளத்தில் தயாரிக்கப்பட்ட மஞ்சு மெல் பாய்ஸ் திரைப்படம் இந்த வருடம் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் நகரம் முதல் குக்கிராமம் வரை உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டு வசூலை வாரிக்குவித்தது.

மலையாள படங்களில் 200 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்த முதல் மலையாள திரைப்படம் என்கிற சாதனையை நிகழ்த்த அடிப்படை காரணிகளில் ஒன்றாக இருந்தது குணா திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம், பாடல்களை இப்படத்தில் பயன்படுத்தியதே என கூறப்பட்டது.

இதனால் குணா திரைப்படம் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

குணா படத்தின் நெகட்டிவ் உரிமை பிரமிட் குரூப் நிறுவனத்திடம் குறிப்பாக திரையரங்குகளில் வெளியிடும் உரிமை இருந்ததால் சூன் 21 அன்று மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் வடிவத்தில் உலகம் முழுவதும் வெளியிட இருப்பதாக அறிவித்தனர்.

அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணிகள் முடிவடைந்த சூழலில் டிஜிட்டல் மூலம் படங்களை திரையிடும் கியூப் நிறுவனம் படத்தை ஒளிபரப்ப மறுத்ததால் சூன் 21 அன்று படம் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

நெகட்டிவ் உரிமை ஆவணத்தின் அடிப்படையில்பிரமிட் நிறுவனத்திற்கு பிரசாத் பிலிம் லேபரட்டரி வழங்கியிருக்கும் ஆவணத்தில் திரையரங்குகளில் குணாபடத்தை வெளியிடும் உரிமை உள்ளது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் கியூப் நிறுவனம் ‘தியேட்ரிக்கல்’ என குறிப்பிடவில்லை என்று கூறி வருகிறது.

அதே நேரம் வெளிநாடுகளில் குணா படத்தை திரையிடும் உரிமையை தங்கள் நிறுவனத்திற்கு வழங்குமாறு பிரமிட் குரூப்பிடம் கேட்டதாகவும் அதற்கு எந்த தடையும் இல்லை என்று குணா படத்தை தியேட்டரில் ஒளிபரப்புவதுதில் முரண்பட்ட நிலையை கியூப் நிறுவனம் கடைப்பிடிக்கிறது என கூறப்படுகிறது.

இப்படத்தை தமிழகத்தில் ஒளிபரப்புவதற்கு மறுப்பதற்கான காரணத்தை எழுத்துபூர்வமாக வழங்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் குணா படத்தை ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் வெளியிடுவது கியூப் நிறுவனத்தால் தடைபட்டு, தாமதமாகி வருகிறது என்று பிரமிட் குரூப் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

வழக்கம்போல விநியோகஸ்தர்கள் சங்கத்தில் இது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடைபெற்ற போது குணா படத்தின் திரையரங்க உரிமை தன்னிடம் உள்ளது என கியூப் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பிய கன்சிராம் என்பவர் அதற்கான ஆவணத்தை வழங்கவில்லை. தங்களது சங்க உறுப்பினர் என்பதற்காக சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கம் கியூப் நிறுவனத்திற்கு குணா படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தங்கள் உரிமையை உறுதிப்படுத்தவும், ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் சம்பந்தமில் லால் காரணங்களை கூறி குணா படத்தின் மறு வெளியீட்டை தடுத்து வரும் கியூப் நிறுவனம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் முயற்சியை பிரமிட் குருப் தொடங்கியுள்ளது.

Guna re-release movie issue news updates

நயன்தாரா – ஆர்யா தந்த அதிர்ச்சி..; ஆகாஷ் & அதிதி-யை வாழ்த்தி ‘நேசிப்பாயா’ லுக் லான்ச்

நயன்தாரா – ஆர்யா தந்த அதிர்ச்சி..; ஆகாஷ் & அதிதி-யை வாழ்த்தி ‘நேசிப்பாயா’ லுக் லான்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா தந்த அதிர்ச்சி..; ஆகாஷ் & அதிதி-யை வாழ்த்தி ‘நேசிப்பாயா’ லுக் லான்ச்

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் ‘நேசிப்பாயா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா..

XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது.

தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசியதாவது…

“பிஸி ஷெட்யூலில் நேரம் ஒதுக்கி வந்த நயன்தாரா மேம்க்கு நன்றி. ஆர்யா சாருக்கும் நன்றி. எங்கள் குடும்பத்திற்கே எமோஷனலான நாள் இது. ‘மாஸ்டர்’ படம் தயாரிக்கும்போது நிறைய சவால்கள் இருந்தது. ஆனால், விஜய் கரியரில் அது சிறந்த படம் எனும்போது நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றும் இல்லை என்று நினைத்தோம். அதற்கடுத்த பெரிய படம் என்னுடைய மருமகன் ஆகாஷூக்கு அமையும் என்று நினைக்கவில்லை.

என் மகள் சிநேகா, ஆகாஷை விரும்புகிறேன் என்று சொன்னதும் நாங்கள் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சவால்களை வாய்ப்பாக மாற்றி கடின உழைப்பை நாம் விரும்பும் ஒன்றுக்கு தர வேண்டும். நடிப்பில் அதெல்லாம் தாக்குப் பிடிப்பீர்களா என்று ஆகாஷிடம் கேட்டேன். அந்த நம்பிக்கை ஆகாஷிடம் இருந்தது.

ஆகாஷை பெரிய அளவில் அறிமுகம் செய்ய வேண்டும், அவரிடம் இருக்கும் ப்ளஸை திரையில் சரியாக கொண்டு வர வேண்டும். இதற்கெல்லாம் சரியான இயக்குநர் விஷ்ணு வர்தன் தான் என என்னுடைய மகள் முடிவெடுத்து மும்பை போய் அவரைப் பார்த்து பேசி சம்மதிக்க வைத்தாள்.

விஷ்ணு வர்தனும் கதையை சிறப்பாக செய்து கொடுத்துள்ளார். அதிதியும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். யுவன் இசையில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது. தொழில்நுட்ப குழுவினர் சிறந்த பணி கொடுத்துள்ளனர். படம் நன்றாக வர வாழ்த்துக்கள்”.

இணைத் தயாரிப்பாளர் சிநேகா..

“நிகழ்வுக்கு வந்திருக்கும் நயன்தாரா மேம்க்கு நன்றி. இந்த வாய்ப்பு கொடுத்த அப்பாவுக்கும் இப்படியான ஒரு ஸ்டைலிஷ் படத்தை எனக்கும் ஆகாஷூக்கும் கொடுத்த விஷ்ணு சாருக்கும் நன்றி. எல்லோரும் ஆகாஷை அன்போடு வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்”.

நயன்தாரா பேசியதாவது….

“‘நேசிப்பாயா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஆகாஷ் முரளிக்கு வாழ்த்துகள்! எனக்கு அதிதி ஷங்கரை ரொம்பவே பிடிக்கும். மிகத் திறமையானவர்.

நான் பொதுவாக எந்த விழாவுக்கும் போக மாட்டேன். ஆனால், இது ரொம்பவே ஸ்பெஷல். இயக்குநர் விஷ்ணு வர்தன், அனுவுடைய படம் இது. பதினைந்து வருடமாக எனக்கு இருவரும் நல்ல பழக்கம். என்னுடைய குடும்பம் போலதான் இவர்கள். அதனால், இந்த நிகழ்வுக்கு என்னால் நோ சொல்ல முடியவில்லை.

இவர்கள் ஆகாஷை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. ரொம்ப நாள் கழித்து ஒரு ஸ்வீட்டான லவ் ஸ்டோரி பார்க்க இருக்கிறீர்கள்” என்று வாழ்த்திவிட்டு படத்தில் ஆகாஷ் முரளியின் ஃப்ர்ஸ்ட் லுக்கை லான்ச் செய்தார்.

ஆகாஷ் முரளி…

“இந்த விழாவிற்காக நேரம் எடுத்து என்னை அறிமுகப்படுத்திய நயன்தாரா மேம்க்கு நன்றி. என்னுடைய தயாரிப்பாளர் பிரிட்டோ சார், சினேகாவுக்கு நன்றி. என்னுடைய கோ-ஸ்டார் அதிதிக்கு நன்றி. நடிக்க ஆரம்பித்த புதிதில் நடுக்கமாக இருந்தது. அவர்தான் என்னை கூல் செய்தார். இயக்குநர் விஷ்ணு வர்தன் சார், அனு வர்தன் மேம், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றி. யுவன் சார் இசையில் நடித்திருப்பது மகிழ்ச்சி. அம்மா, அண்ணன் வந்திருக்கிறார்கள். அண்ணாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். எல்லோருக்கும் நன்றி”.

நடிகர் ஆர்யா…

“எனக்குப் பிடித்த இயக்குநர் விஷ்ணு இயக்கத்தில் ஆகாஷ் அறிமுகம் ஆவதில் மகிழ்ச்சி. கொடுத்த காசில் ஸ்டைலிஷ்ஷாக படம் எடுப்பார் விஷ்ணு. அனுவுடைய காஸ்ட்யூமும் சிறப்பாக இருக்கும். இது எங்களுக்கு குடும்ப நிகழ்வு போலதான். படக்குழுவுக்கு வாழ்த்துகள்” எனச் சொல்லி ’நேசிப்பாயா’ படத்தில் அதிதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அறிமுகப்படுத்தினார்.

நடிகை அதிதி, “முதலில் என்னுடைய தயாரிப்பாளர்கள் சேவியர் சார், சிநேகாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஷ்ணு சாருக்கு நன்றி. என்னுடைய முதல் காதல் கதை இது. எல்லோருக்கும் பிடிக்கும். ஆகாஷூக்கு முதல் படம். சிறப்பாக செய்திருக்கிறார். முரளி சார், அதர்வா சார் மற்றும் எனக்கு கொடுத்த அன்பும் ஆதரவும் ஆகாஷூக்கும் கொடுங்கள். இந்த இண்டஸ்ட்ரியில் எனக்கு மிகவும் பிடித்த நயன் மேம் மற்றும் ஆர்யா சார் இருவரும் இந்த நிகழ்வை சிறப்பித்துக் கொடுத்ததற்கு நன்றி”.

இயக்குநர் விஷ்ணு வர்தன்…

“விழாவிற்கு வந்துள்ள நயன், ஆர்யா, தயாரிப்பாளர்கள் பிரிட்டோ சார், சிநேகா எல்லோருக்கும் நன்றி. இந்தப் படம் ஒரு லவ் டிராமா. கதையில் ஆக்‌ஷனும் உள்ளது. ஆகாஷூக்கு இது முதல் படம் போல இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார். அதிதி பயங்கர எனர்ஜியாக உள்ளார். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்”.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, “இந்த நாள் எங்கள் எல்லோருக்கும் சிறப்பான நாள். படத்தின் முதல் பார்வையே நம்பிக்கை தந்துள்ளது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்!”.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், “படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். பிரிட்டோ எதைத் தொட்டாலும் வெற்றிதான். இப்போது அவர் மருமகனை வைத்து படம் எடுத்துள்ளார். நிச்சயம் பெரிய வெற்றி கிடைக்கும்”.

தயாரிப்பாளர் தேனப்பன், “முரளி சாருடன் நிறைய படங்கள் வேலை பார்த்திருக்கிறேன். அவருடைய மகன் ஹீரோவாக அறிமுகமாகும் நிகழ்வில் நான் இருப்பது மகிழ்ச்சி. எல்லோருக்கும் வாழ்த்துகள்!”.

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்…

“முரளியுடன் நிறைய நல்ல நினைவுகள் எனக்கு உள்ளது. அவருடைய குடும்பமும் எனக்கு நல்ல பழக்கம். அதர்வா இப்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆகாஷை இந்த போஸ்டரில் பார்த்தபோது, ‘உதயா’ படத்தில் நாகர்ஜூனாவைப் பார்த்தது போல இருக்கிறது. இதற்கெல்லாம் பின்னால் ஸ்டைலிஷ் இயக்குநர் விஷ்ணு வர்தன் இருக்கிறார். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!”.

இயக்குநர் இளன், “விஷ்ணு வர்தன் – யுவன் காம்பினேஷனில் ஒரு ஹீரோவுக்கு சூப்பரான அறிமுகம் இது. ஆகாஷ்- அதிதி காம்பினேஷன் போஸ்டரில் சூப்பராக உள்ளது. வாழ்த்துகள்”.

அதர்வா முரளி…

“என்னுடைய குடும்பத்திற்கு சந்தோஷமான, அதே சமயம் எமோஷனலான நாள் இது. ஆகாஷூக்கு முதல் படத்திலேயே பிரிட்டோ சார் போன்ற ஒரு தயாரிப்பாளர் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ஆகாஷ் கனவுக்கு வடிவம் கொடுத்த இயக்குநர் விஷ்ணுவுக்கு நன்றி. என்னுடைய முதல் படமான ‘பாணா காத்தாடி’யில் யுவன் இசைக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்தேனா அதேபோலதான், ஆகாஷூக்கும். நான் அறிமுகமாகும் போது அப்பா இருந்தார். அந்த சமயத்தில் அவர் என்ன யோசித்திருப்பார் எனத் தெரியவில்லை. ஆனால், ஆகாஷ் மேடையில் பேசுவதை நான் கீழிருந்து பார்க்கும்போதுதான் எனக்கு அப்பாவின் மனநிலை புரிகிறது.

ரொம்பவே எமோஷனலாக இருக்கு. அப்பாவின் கடைசி தருணத்தில் அம்மா, அக்கா, நான் என எல்லோருமே எமோஷனலாக இருந்தோம். அப்போ ஆகாஷ் சின்ன பையன். பாத்துக்கலாம் அண்ணா என எனக்கு ஆறுதல் சொன்னார். இப்போ அவர் ஹீரோவாக அறிமுகம் ஆவது மகிழ்ச்சி. அப்பாவுக்கும் எனக்கும் என்ன அன்பும் ஆதரவும் கொடுத்தீர்களோ அதைவிட ஒருபடி மேலே என் தம்பிக்கு நீங்கள் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்”.

Nayanthara at Nesippaya first look launch

சன்னிலியோன் பற்றிய உங்கள் கற்பனையை ‘கொட்டேஷன் கேங்’ மாற்றும்.. – ப்ரியாமணி

சன்னிலியோன் பற்றிய உங்கள் கற்பனையை ‘கொட்டேஷன் கேங்’ மாற்றும்.. – ப்ரியாமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன்னிலியோன் பற்றிய உங்கள் கற்பனையை ‘கொட்டேஷன் கேங்’ மாற்றும்.. – ப்ரியாமணி

’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!*

ஃபிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

மேக்கப் ஆர்டிஸ்ட் தசரதன், “இந்தப் படத்தில் எனக்கு மேக்கப்பில் அதிக வேலை இருந்தது. ப்ரியாமணி உட்பட அனைவருமே கஷ்டப்பட்டுதான் வேலை செய்திருக்கிறோம். படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

ஸ்டண்ட் மாஸ்டர் ஓம் பிரகாஷ், “காஷ்மீரில் நிறைய ஸ்டண்ட் செய்தோம். சன்னி மேடம், ப்ரியாமணி மேடம் இருவரும் ரிஸ்க்கான ஸ்டண்ட்டை மழையில் ஒரே டேக்கில் டூப் இல்லாமல் ஓகே செய்தார்கள். இதுபோல பல ரிஸ்க்கான காட்சிகள் இருக்கிறது. ‘யாத்திசை’ படத்துக்குப் பிறகு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விவேக், தயாரிப்பாளர் காயத்ரிக்கு நன்றி”.

எடிட்டர் வெங்கட்ராமன், “எடிட்டாக இந்தப் படம் நிறைய வெர்ஷன் பார்த்தோம். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களைப் போலவே எனக்கும் நிறைய வேலை இருந்தது. உங்கள் அனைவரது ஆதரவும் வேண்டும்”.

ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாதன், “வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. ஜாக்கி ஷெராப் போன்ற லெஜெண்ட்ஸூடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. ப்ரியாமணி, சன்னி லியோன் இருவரும் சிங்கிள் டேக்கில் ஸ்டண்ட் அசத்தி விட்டார்கள்”.

நடிகை அக்‌ஷயா, “ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி என சீனியர் நடிகர்கள் எல்லோருமே எங்களிடம் அவ்வளவு அன்பாக நடந்து கொண்டார்கள். படத்தில் ப்ரியாமணி எனக்கு நடிப்பதற்கான ஸ்பேஸ் கொடுத்தார். அது பெரிய விஷயம்! படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்”.

பாடலாசிரியர் அருண் பாரதி, “இயக்குநரை இங்கேதான் முதல்முறையாக பார்க்கிறேன். டிரம்ஸ் சிவமணி சார்தான் எனக்கு பாட்டெழுத சொன்னார். படத்தில் நான் எழுதிய அனைத்துப் பாடல்களுமே நன்றாக வந்துள்ளது. இயக்குநருக்கும் பிடித்துள்ளது. படத்தில் பணிபுரிந்தது நல்ல அனுபவம். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்!”.

நடிகர் பிரதீப், “இயக்குநர் விவேக்கும் நானும் நண்பர்கள். அவர் படம் செய்யும்போது எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சீனியர் நடிகர்கள் ப்ரியாமணி, சன்னி லியோனுக்கு நன்றி. அடுத்த மாதம் படம் வெளியாகிறது!”.

நடிகர் அசோக், “படத்தின் இயக்குநர் விவேக், ப்ரியாமணி, சன்னி லியோன் என உடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி”.

தயாரிப்பாளர் காயத்ரி சுரேஷ், “எனக்கு தயாரிப்பாளராக வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விவேக்கிற்கு நன்றி. மல்டி ஸ்டார்ஸ் படம் என்றால் நிறைய பிரச்சினைகள் வரும் என்று நினைத்தோம். ஆனால், அதெல்லாம் இல்லாமல் ப்ரியாமணி, சன்னி லியோன், அக்‌ஷயா என எல்லோருமே சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். எல்லோருக்கும் நன்றி”.

இணைத் தயாரிப்பாளர் விவேகானந்தன், “இது தமிழ்ப்படம். ஆனால், இந்திப்படம் போல எடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள், டெக்னீஷியன்ஸ் என எல்லோருமே சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். இயக்குநர் பாலாவுக்கு பிறகு இயக்குநர் விவேக்கைதான் சொல்வேன். அந்த அளவுக்கு சிறப்பாக படத்தை எடுத்துள்ளார். படம் நன்றாக வர பிராத்திக்கிறேன்”.

நடிகை ப்ரியாமணி, “இயக்குநர் விவேக்கிற்கு நன்றி. இவர் என்னிடம் சொன்ன முதல் கதை சில காரணங்களால் டேக் ஆஃப் ஆகவில்லை. இரண்டாவது சொன்ன இந்த கதை பிடித்துவிட்டது. என்னுடைய கரியரில் காண்ட்ராக்ட் கில்லர் ரோல் இதுவரை செய்ததில்லை. இயக்குநர் விவேக்கின் சகுந்தலா கதாபாத்திரத்தை நன்றாக நடித்திருக்கிறேன் என நம்புகிறேன். தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக பணியாற்றினார்கள். எனக்கும் அக்‌ஷயாவுக்கும்தான் நிறைய காம்பினேஷன் காட்சிகள். அக்‌ஷயா சிறப்பாக செய்திருக்கிறார். சன்னி பற்றி வேறொரு இமேஜ் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், இந்தப் படத்தில் அவருடைய பத்மா கதாபாத்திரம் உங்கள் எண்ணத்தை மாற்றிவிடும். ஜாக்கி ஷெராப் சாரும் எங்களுக்கு சப்போர்ட்டாக இருந்தார். படம் ஜூலையில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகை சன்னி லியோன், “இந்தப் படத்தில் எனக்கு நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது. என்னைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இந்தப் படம் நிச்சயம் மாற்றும். படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்”.

இயக்குநர் விவேக்குமார் கண்ணன், “முதலில் ப்ரியாமணி மேம் வைத்துதான் படத்தை ஆரம்பித்தோம். அடுத்து ஜாக்கி ஷெராப், சன்னி லியோன் என அடுத்தடுத்து வந்தார்கள். காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்துவது எளிதான விஷயம் கிடையாது. கேமரா மேன், ஸ்டண்ட் மாஸ்டர், மேக்கப் ஆர்டிஸ்ட் என எல்லோருமே சிறப்பாக பணி செய்தார்கள். ப்ரியாமணி, சன்னி லியோன், ஜாக்கி ஷெராப், அக்‌ஷயா என எல்லோருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பேபி சாராவுக்கு சிறப்பான கதாபாத்திரம் படத்தில் இருக்கிறது. தியேட்டரில் உங்களுக்கு அந்த அனுபவம் கிடைக்க வேண்டும் என்றுதான் நிறைய வேலை பார்த்திருக்கிறோம். படம் ஜூலையில் பாருங்கள்” என்றார்.

Quotation Gang movie will change image of Sunny Leone

கடைசி நிமிடத்தில் கதை சொல்லி ரக்ஷிதா-வை ஓகே செய்த U R NEXT டைரக்டர்

கடைசி நிமிடத்தில் கதை சொல்லி ரக்ஷிதா-வை ஓகே செய்த U R NEXT டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடைசி நிமிடத்தில் கதை சொல்லி ரக்ஷிதா-வை ஓகே செய்த U R NEXT டைரக்டர்

அறிமுக இயக்குநர் ஷரீஃப் எழுத்து மற்றும் இயக்கத்தில் தயாராகும் படம் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’. U R NEXT

இத்திரைப்படத்தில், கே.எஸ்.ரவிக்குமார், ரச்சிதா மகாலட்சுமி, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கே பி ஒய் வினோத், ரஃபி, ‘புல்லட்’ சமி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

கே ஜி ரத்தீஷ் ஒளிப்பதிவாளராகவும், அஜித் படத்தொகுப்பாளராகவும், டிஜிட்டல் மீடியா மூலமாக பிரபலமான அறிமுக இசையமைப்பாளர் ‘இசை பேட்டை’வசந்த் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

வேணு கலை இயக்கத்தையும், ஓம் பிரகாஷ் சண்டைப்பயிற்சியையும், ‘கலைமாமணி’ ஸ்ரீதர் நடனத்தையும் கவனிக்கிறார்கள்.

ஆடை வடிவமைப்பாளராக ஈகா பிரவீனும், தயாரிப்பு நிர்வாகியாக நந்தகுமாரும் இத்திரைப்படத்தில் பணியாற்றுகின்றனர்.

ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோர் தயாரிக்கின்றனர்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் பல்வேறு சம்பவங்களை ஹாரர் பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். உள்ளது.

இத்திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ்,கன்னடம்,தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக உள்ளது.

இந்திய சினிமா ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின் மூலம் புதுவிதமான அனுபவத்தை வழங்க படக்குழு தயாராகியுள்ளது.

இன்று, படத்தில் நடிக்கும் கே.எஸ் ரவிக்குமார் ரச்சிதா மகாலட்சுமி மற்றும் பல நட்சத்திரங்கள், படக்குழுவினர் முன்னிலையில் இத்திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.

படத்தின் பூஜை நிறைவுற்றவுடன் முதலாவதாகப் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்,

“இந்தப்படத்தின் கதையைக் கேட்டவுடன் வித்தியாசமான ஹாரர் கதையாக இருந்தது.என்னுடைய கதாபாத்திரம் எனக்குப் பிடித்திருந்தது.

மேலும் இந்தத்திரைப்படம் இளைஞர்களுக்கான திரைப்படமாக உருவாகிறது. இயக்குநர் ஷரீஃப் இந்தத்திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்,” என்றார்.

அடுத்ததாகப் பேசிய ரச்சிதா மகாலட்சுமி,

”இந்தப்படம் எனக்கு ஒரு புதிராகவே உள்ளது. கடைசி நிமிடத்தில் படத்தின் கதையைக் கூறினார்கள். கதை பிடித்திருந்ததாலும் படத்தில் நடிக்கும் சிறந்த நட்சத்திரங்களாலும் நடிக்க ஒத்துக் கொண்டேன். படத்தின் கதை ஹாரர் கதையம்சத்தை கொண்டது. உங்கள் அனைவரது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் திரைப்படமாக இருக்கும்” என்றார்.

பின்னர் பேசிய இயக்குநர் ஷரீஃப்,

யூ ஆர் நெக்ஸ்ட் திரைப்படத்தின் மூலம் நான் தமிழ்த் திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகம் ஆகின்றேன். என்னையும் என் கதையும் நம்பி இந்தப்படத்தைத் தயாரிக்க ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்கள் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகிய இருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல இங்கு வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர்,நடிகைகளுக்கும் ஊடகத்துறையினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் பேசினார்.

Tv Serial fame Rakshitha starrer in U R Next movie

எனக்கு ரசிகைகள் அதிகம்.. – பயில்வான்.; ‘அறம் செய்’ படத்தில் அதிமுகவிக்கு அதிர்ச்சியளிக்கும் திருச்சி சாதனா

எனக்கு ரசிகைகள் அதிகம்.. – பயில்வான்.; ‘அறம் செய்’ படத்தில் அதிமுகவிக்கு அதிர்ச்சியளிக்கும் திருச்சி சாதனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எனக்கு ரசிகைகள் அதிகம்.. – பயில்வான்.; ‘அறம் செய்’ படத்தில் அதிமுகவிக்கு அதிர்ச்சியளிக்கும் திருச்சி சாதனா

“அறம் செய்” திரைப்பட இசை வெளியீட்டு விழா

Thaaragai cinimas தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “அறம் செய்”. நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது “அறம் செய்”.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது

இந்நிகழ்வினில்

நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது….

இயக்குநர் பாலு எஸ் வைத்தியநாதன் ஒரு நாள் போனில் பேசினார். நான் நடிக்க வேண்டும் என்றார், நான் Youtube ல், பேசுவது பற்றித் தெரியுமா என கேட்டேன், தெரியும் சார், தெரிந்து தான் கூப்பிட்டேன் என்றார். மகிழ்ச்சி என்றேன். இவரிடம் உள்ள நல்ல விசயம் வசனத்தை முதல் நாளே போனில் அனுப்பிவிடுவார், அவர் எழுதின டயலாக்கை அப்படியே சொன்னேன். அப்போதே தெரியும், இந்தப்படம் கண்டிப்பாகச் சர்ச்சையில் சிக்குமெனத் தெரியும். முழுக்க முழுக்க அரசியலில் நடந்த உண்மை சம்பவங்களை எடுத்திருக்கிறார்.. ஆனால் போஸ்ட்ரில் இப்படத்தில் அரசியல் இல்லை எனப் பொய் சொல்லியிருக்கிறார்.

இன்று எனக்கு தமிழ்நாட்டில் பெண் ரசிகைகள் அதிகம் இருக்கிறார்கள். நான் எப்போதும் தவறான தகவலைப் பேசுவதில்லை, என் சமீபத்துப் பதிவுகளைப் பார்த்தால் தெரியும், கள்ளச்சாரயத்தை காச்சுவபவனை தூக்கில் போட வேண்டும் என்று பேசியுள்ளேன். எல்லா மது ஆலைகளையும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தான் அவர்கள் எப்படி கள்ளை கொண்டு வருவார்கள். நான் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என எல்லோரையும் விமர்சனம் செய்கிறேன்.

ஆனால் என் சில வீடியோக்களை மட்டும் பார்த்துவிட்டு தவறாக பேசுகிறார்கள். இந்தப்படத்தில் பேசிய தொகையைச் சரியாகத் தந்தார்கள், ஆனால் பாவம் ஜீவாவை ஹிரோ என சொல்லி ஏமாற்றிவிட்டார்கள் என நினைக்கிறேன். ஜீவாவை எனக்கு 35 வருடமாகத் தெரியும், நல்ல நடிகர்.

நான் அரசியல்வாதி கேரக்டர் செய்துள்ளேன், இயக்குநர் ஒரு சிறு அசைவு கூட சரியாக வர வேண்டும் என அடம்பிடித்து எடுப்பார். டயலாக்கை எல்லாம் மாற்றவிடமாட்டார். மிக நன்றாகப் படத்தை எடுத்துள்ளார். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்

திருச்சி சாதனா பேசியதாவது…

எனக்கு மிகச் சந்தோசமாக இருக்கிறது, அறம் செய் இசை விழா பிரம்மாண்டமாக இருக்கிறது. அரசியல் சம்பந்தமான ஒரு படத்தைத் துணிந்து மிகத் தைரியமாக எடுத்திருக்கிறார் இயக்குநர். இயக்குநர் படத்தைப் பற்றி மட்டும் தான் பேச சொன்னார் ஆனால் மற்ற எல்லாத்தையும் பேசி பிரச்சனையாகிவிடும் போல் தெரிகிறது. இந்தப்படத்தில் நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறேன்.

இந்த ரோலில் எல்லோரும் நடிக்க மறுத்துவிட்டார்கள் நீ நடிக்கிறாயா எனக் கேட்டார், எனக்குத் தயக்கமாக இருந்தது. எல்லோரும் அரசியல் பேச வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த படத்தை எடுப்பதாக இயக்குநர் சொன்னார். எனக்குத் தைரியம் கொடுத்து, நடிக்க வைத்தார்.

இந்த படத்திற்காக ஜெயலலிதா அம்மாவின் நடை, உடை, பாவனைகளைப் பார்த்துக் கற்றுக்கொள்ளச் சொன்னார். வீடியோக்கள் பார்த்து கற்றுக் கொண்டு, நடித்திருக்கிறேன். நீங்கள் உங்கள் ஆதரவை இந்த திரைப்படத்திற்குத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

நடிகை மேகாலி மீனாட்சி பேசியதாவது…

அறம் செய் திரைப்படம், மிக இனிமையான அனுபவம். இந்த படத்தில் மிக நல்லதொரு கேரக்டர் செய்துள்ளேன். பப்ளி கேரக்டர். என்னை நம்பி இந்த கேரகடர் தந்ததற்கு இயக்குநர் பாலு சாருக்கு நன்றி. இயக்குநர் பாலு சார் மிக எனர்ஜி ஆனவர், செட்டில் எப்போதும் பரபரப்பாகவே இருப்பார். எங்களுக்கு மிக அன்பாக எல்லாம் சொல்லித் தருவார். படத்தை மிகச் சிறப்பாக எடுத்து உள்ளார்.

தயாரிப்பாளர் ஸ்வேதா மேடத்திற்கும் நன்றி எங்களையெல்லாம் நன்றாகப் பார்த்துக் கொண்டார். ஜீவா நடிக்கும்போது நல்ல ஒத்துழைப்பு தந்தார். படக்குழ்வினர் மிக உறுதுணையாக இருந்தார்கள். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. அனைவரும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகை அஞ்சனா கீர்த்தி பேசியதாவது…

இந்த விழாவிற்கு வருகை தந்து, எங்களையெல்லாம் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் எனக்கு மிக அழுத்தமான கேரக்டர், ரசிகர்களிடம் ஒன்று நிறையப் பாராட்டுக்கள் வாங்குவேன், அல்லது திட்டு வாங்குவேன் என நினைத்தேன். இயக்குநரிடம் அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன், இயக்குநர் மிக அற்புதமாகப் படத்தை எடுத்துள்ளார். படம் மிக நன்றாக வந்துள்ளது. படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் ஜீவா பேசியதாவது…

பாலு எஸ் வைத்தியநாதன் இந்தப்படத்தின் நாயகன் இயக்குநர் ஒன் மேன் ஆர்மி மாதிரி செயல்பட்டு தன் மனதிலிருந்ததை படமாக எடுத்துள்ளார். மிக இளகிய மனதுக்காரர் நல்ல மனிதர். தயாரிப்பாளர் ஸ்வேதா மேடத்திற்கு நன்றி. ஹீரோயின் மேகாலி நல்ல நடிகை, நன்றாக டான்ஸ் ஆடியுள்ளார், அவருடன் எனக்கு சாங்க் இருக்கிறது எனச் சொல்லிவிட்டு பாலு சார் அவரே தனியாக போய் டான்ஸ் ஆடிவிட்டு வந்துவிட்டார். பரவாயில்லை, மேகாலி மிகத் திறமையான நடிகை, அஞ்சனா கீர்த்தி, அவரும் நன்றாக நடித்துள்ளார். ஜாக்குவார் தங்கம் மிகச் சர்ச்சையான வசனங்கள் பேசி நடித்துள்ளார்.

இயக்குநர் கடைசி வரை கதையே சொல்லவில்லை அவர் சொன்னதைத் தான், எல்லோரும் செய்துள்ளோம். பயில்வான் அண்ணன் நல்ல கேரக்டர் செய்துள்ளார் அவருடன் நடித்தது நல்ல அனுபவம். என்னைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டேன் என்கிறார் சும்மாவாச்சும் ஏதாவது என்னைப் பற்றிச் சொல்லி விடுங்கள் நன்றாக இருக்கும். வெற்றி அண்ணன் வில்லனாக நடித்திருக்கிறார். நாங்கள் பார்த்தவரைக்கும் சாவித்திரி மேடத்தின் அன்பான அழைப்பில் தான் இந்த விழாவிற்கு வந்தேன். இந்தப்படம் நன்றாக வந்துள்ளது. . படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

ஜாக்குவார் தங்கம் பேசியதாவது…

அறம் செய் மிக நல்ல கருத்து சொல்லும் படம், இயக்குநர் பாலு மிக நன்றாக இயக்கியுள்ளார். பாடல்கள் எல்லாம் நன்றாக உள்ளது. பாடலாசிரியர் சினேகனுக்குத் தேசிய விருது கிடைக்கும் என நம்புகிறேன். படமும் மிக மிக நல்ல கருத்து சொல்கிறது. எல்லோருமே இங்கு நல்லவர்கள் தான், கெட்டவன் அழிய வேண்டும் நல்லது நிலைக்க நிலைக்க வேண்டும் என எல்லோருமே நினைக்கிறோம்.

இன்று அமெரிக்காவில் குடும்பம் என்பதே சிதைந்து அழிந்துவிட்டது, எதற்காக வாழ வேண்டும், குடும்பம், பாசம், எதுவும் இல்லாமல் மனித வாழ்க்கையே இல்லை. தனித்தனி ரூம், தனித்தனி செல்போன், என வாழ ஆரம்பித்துவிட்டோம். எப்படி சாராயம் மிகப்பெரிய கொடுமையோ, அது போல் செல்போன் மிகப்பெரிய கொடுமை, அதை தவிர்க்க வேண்டும். பணம் எல்லாத்தையும் மாற்றி விடாது, எதையும் தந்து விடாது, ஒழுக்கமாக நல்லவனாக இருந்தால் தான் நமக்கு நல்ல வாழ்வு கிடைக்கும்.

இரண்டு ஹீரோயினுக்கும் நன்றாகத் தமிழ் தெரியும், ஆனால் ஏனோ தமிழில் பேசவில்லை, தமிழ்நாட்டில் தமிழில் பேசுங்கள். இந்தப்படம் நன்றாக நல்ல கருத்தைச் சொல்லும் படமாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத்தாருங்கள் நன்றி.

இயக்குநர் நடிகர் பாலு எஸ் வைத்தியநாதன் பேசியதாவது…

இது அரசியல் படம் தான் ஆனால் நாங்கள் அரசியல் பேசவில்லை, ஏனென்றால் இந்த படத்தில் நடித்த எல்லோருக்கும் அடுத்த வாழ்க்கை இருக்கிறது. ஜீவா நீட் பற்றி பேசி இருக்கிறார். அஞ்சனா கீர்த்தி அவருடைய கதாபாத்திரத்தின் அரசியல் பேசி இருக்கிறார். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களுக்கான அரசியலைப் பேசி உள்ளார்கள், இந்த படம் அரசியல் படம் தான்.

ஆனால் நாங்கள் பேசவில்லை, அடுத்த படத்தில் நாங்கள் வேறு கதை சொல்வோம். நமக்குத் தேவை ஆட்சி மாற்றம் இல்லை, முழுமையான அரசியல் மாற்றம். இதுதான் இப்படத்தின் திரைக்கதை. இப்படத்தில் நாட்டிலுள்ள அரசியல்வாதிகளையும், தனிநபர்களையும் அரசியல் கட்சியையும் தாக்கி பேசவில்லை, எந்த ஒரு தனி நபரையும் தாக்கி காட்சிகள் வைக்கவில்லை, அப்புறம் எப்படி இது அரசியல் படம் என நீங்கள் கேட்கலாம்.

74 ஆண்டு காலம் மாறி மாறி ஆட்சி செய்த, அரசியல் கட்சிகள் மக்களுக்கு எதிராகச் செய்த செயல்களை இப்படத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம் அதனால் தான் இது அரசியல் படம். இந்திய அரசியல் சாசனப்படி மக்கள் ஆட்சி எப்படி இருக்க வேண்டும் எனப் பேசி இருக்கிறோம். படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி

Bayilvan Ranganathan at Aram Sei Audio launch

விஜய்ஆண்டனி – சரத்குமார் – சத்யராஜ் இணைந்த படத்திற்கு சென்சார் சர்டிபிகேட்

விஜய்ஆண்டனி – சரத்குமார் – சத்யராஜ் இணைந்த படத்திற்கு சென்சார் சர்டிபிகேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்ஆண்டனி – சரத்குமார் – சத்யராஜ் இணைந்த படத்திற்கு சென்சார் சர்டிபிகேட்

நடிகர் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது..

நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை விஜய் மில்டன் எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.

இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்துள்ளனர். படத்திற்கு தற்போது யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

படத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், டாலி தனஞ்செயா, முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணா, ப்ருத்வி அம்பர், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் மற்ற இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணி, ராய் மற்றும் வாகு மசான் ஆகியோர். படத்தொகுப்பை பிரவீன் கே.எல். கையாண்டுள்ளார்.

விஜய் ஆண்டனியின் படங்களில் எப்போதும் அழகான மற்றும் மறக்க முடியாத பாடல்கள் இருக்கும்.

‘மழை பிடிக்காத மனிதன்’ படம் அதன் தலைப்பைப் போலவே மனதைக் கவரும் மெல்லிசை மற்றும் பெப்பி பாடல்கள் என சுவாரஸ்யமான கலவையைக் கொண்டுள்ளது.

இசையமைப்பாளர் ராயின் இசையமைப்பில் படத்தில் இருந்து வெளியான ‘தீரா மழை’ மற்றும் இசையமைப்பாளர் ஹரி டஃபுசியாவின் ’தேடியே போறேன்’ ஆகிய இரண்டு பாடல்களுக்கும் இசை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரிலீஸூக்கு தயாராகி வரும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்..

Mazhai Pidikadha Manithan censored UA

More Articles
Follows