தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
HARAA U/A அலறவிடும் ‘ஹரா’ ட்ரைலர்..; மோகன் ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிறச் செய்த விஜய் ஸ்ரீ
1980-களில் ரஜினி கமல் இருவரும் தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலேயே அவர்களுக்கு நிகராக வெள்ளி விழா நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் மோகன்.
இவரது படத்தில் இளையராஜாவும் எஸ் பி பாலசுப்ரமணியம் இணைந்தால் அந்தப் பட பாடல்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் தான்..
இப்படியாக திரை உலகை கலக்கி கொண்டிருந்த மோகன் கடந்த 14 வருடங்களுக்கு மேலாக சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
மீண்டும் நடித்தால் கதையின் நாயகனாகவே நடிப்பேன் என்று காத்திருந்த மோகனை மீண்டும் திரைக்கு அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி.
இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ஹரா’. இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது.
ஓரிரு தினங்களுக்கு முன் ‘ஹரா’ படத்தின் டிரைலரும் வெளியாகி இதுவரை 15+ லட்சம் பார்வையாளர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது..
இந்த நிலையில் அடுத்த மாதம் ஜூன் 7ம் தேதி ஹரா படம் வெளியாக உள்ள நிலையில் இந்த ரிலீஸை கொண்டாட காத்திருக்கிறார்கள் மோகன் ரசிகர்கள்.
தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரள மற்றும் கர்நாடகாவிலும் இந்த படத்தை பிரம்மாண்டமாக வெளியிட இருக்கின்றனர்.
விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ள இந்த படத்தில் மோகனுடன் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.
மலையாள நடிகை அனுமோல் மோகனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் சீனியர் நடிகர் சாருஹாசன், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், வனிதா விஜயகுமார், ஜெயக்குமார், ரயில் ரவி, சுரேஷ் மேனன் தீபா ஷங்கர், சிங்கம்புலி, ஆதவன், அனித்ரா நாயர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஒளிப்பதிவை பிரஹத் முனியசாமி மற்றும் மனோதினகரன் இருவரும் கையாண்டுள்ளனர்.
ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ள இந்த பட எடிட்டிங் பணிகளை குணா செய்து இருக்கிறார்..
ஜூன் 7ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் வகையில் இதன் வெளியீட்டை பிரபல நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பெற்று வருகின்றன.
தமிழக வெளியீடு உரிமையை எல்மா என்ற நிறுவனமும் திருச்சி செங்கல்பட்டு உள்ளிட்ட ஏரியாக்களின் வெளியீட்டு உரிமையை பிரபல சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமும் பெற்றுள்ளது.
‘ஹரா’ படத்திற்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் கோவை மற்றும் கேரளா பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரம்மாண்டமாக கோயம்புத்தூர் மோகன் ராஜ், ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.
Haraa movie release and Business updates