தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அதன்படி கட்சியை வளர்க்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று (7.11.18) அவர் தன் 64வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
ஓரிரு தினங்களுக்கு முன் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அதில் ‘இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். கேக் வெட்டுதல் உள்ளிட்ட ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம்.
அதற்குப் பதிலாக ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆசிரமங்களில் உள்ளவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். ரத்த தானம் போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டும்’ என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது…
ஊழலற்ற சுகாதாரமான அரசியல் தேவை என்பதில் மக்கள் நீதி மய்யம் உறுதியாக உள்ளது.
மேலும் தமிழகத்தில் நடைபெறவுள்ள 20 தொகுதிகளின் இடைத்தேர்தலை சந்திக்கவு மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது.
நான் எந்த கட்சிக்கும் குழலோ ஊதுகுழலோ கிடையாது; நான் மக்களின் கருவி.” என பேசினார்.
I am Peoples tool says Kamalhassan on his birthday today