யாரை பார்த்தும் பொறாமையும் பயமும் இல்லை.. : சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா திரைப்படம் வருகிற செப்டம்பர் 13ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

பொன்ராம் இயக்கியுள்ள இப்படத்தில் சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இமான் இசையைமைத்துள்ள இப்படத்தை ஆர்.டி. ராஜா மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இதன் விளம்பரங்கள் மற்றும் புரோமோசன் நிகழ்ச்சிகள் அனைவரும் கவர்ந்து வரும் நிலையில் இதன் டிரைலரை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் படக்குழுவினர் வெளியிட்டனர்.

அப்போது சிவகார்த்திகேயன் பேசும்போது…

நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரை பார்த்தும் பயப்படுவதில்லை, பொறாமையும் கிடையாது.

சினிமாவில் என் அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன். நிறைய பிரபலமான நட்சத்திரங்கள் இந்த சினிமாவில் நானும் இருப்பதை பெருமையாக உணர்கிறேன்” என பேசினார்.

I dont have any fear says Sivakarthikeyan at Seemaraja Trailer launch

தமிழர் மன்னனாக நடித்து *பாகுபலி* பாராட்டை பெற்ற சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன், பொன்ராம் இணையும் படங்கள் எப்போதுமே குடும்பங்கள் கொண்டாடும் திருவிழாவாக தான் இருக்கும். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக மூன்றாவதாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’.

சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி என நட்சத்திரப் பட்டாளத்தோடு சிவகார்த்திகேயன் களமிறங்க, அவருக்கு பக்கத்துணையாக டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

24AM ஸ்டூடியோஸ் மிகப்பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த சீமராஜா விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. ஏற்கனவே மதுரையில் மிக பிரமாண்டமாக வெளியாகிய டீசர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் எனக்கு கொஞ்சம் பயம் இருந்துட்டே இருக்கும். ஆனால் இந்த படம் ரிலீஸுக்கு எனக்கு சுத்தமா பயமே இல்லை. படத்தின் வெற்றி முன்பே எழுதப்பட்டு விட்டது.

கிராமத்து படம் என்றாலே அது பொன்ராம் சார், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரின் கோட்டை. அதில் எனக்கும் ஒரு நல்ல கதாபாத்திரத்தை வழங்கிய மொத்த குழுவுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார் நாயகி சமந்தா அக்கினேனி.

சிவா இந்த படத்தில் மிகச்சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார். குழந்தைகளை கவர சின்ன சின்ன விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார், படம் உங்கள் எதிர்பார்ப்புக்கும் மேலே இருக்கும் என்றார் நடன இயக்குனர் ஷோபி.

பொன்ராம் உடன் இது எனக்கு மூன்றாவது படம். படத்தை ஆரம்பிக்கும்போதே இது வெற்றி பெறும் என்று உறுதியாகி விட்டது. இப்போதைய எஸ்.பி. முத்துராமன் என்றால் அது பொன்ராம் தான். அனைத்து தரப்பையும் கவரும் விஷயங்கள் பொன்ராம் படத்தில் இருக்கும் என்றார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம்.

இன்று நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் தம்பி சிவகார்த்திகேயன் தான். முந்தைய படங்களை விட இந்த படத்தில் சிவா, சூரி காமெடி களைகட்டும். வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றன. கூட்டணி தாண்டி, இவரோடு நிச்சயம் வேலை செய்யலாம் என்ற அளவில் என்னையும் இந்த படத்தில் சேர்த்துக் கொண்டதற்கு மகிழ்ச்சி என்றார் இசையமைப்பாளர் டி.இமான்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என்னை எந்த அளவுக்கு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததோ அதை தாண்டி இந்த சீமராஜா என்னை கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பொன்ராம், சிவா, சூரி கூட்டணி நல்லா இருக்கும் என மக்கள் பேசுகிறார்கள். அப்படி எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி.

இந்த படத்தில் என் உடலை பார்த்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார்கள். சிவா, பொன்ராம், முத்துராஜ் என இந்த படத்தில் 3 ஹீரோக்கள். முத்துராஜ் சார் வேலை செய்யும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்ததே இல்லை.

அது இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. சிவா அதிர்ஷ்டத்துல மேல வந்துட்டார்னு சிலர் பேசுறாங்க. அதிர்ஷ்டம் வரும் போகும், ஆனா திறமை இல்லாம அந்த இடத்தை தக்க வைக்கவே முடியாது. இந்த நிலைக்கு வர சிவா எவ்வளவு கஷ்டப்பட்டார்னு எனக்கு தான் தெரியும்.

அது தான் ஒவ்வொரு குடும்பத்திலும் அவருக்கென ரசிகர்களை உருவாக்கியிருக்கிறது. எங்கு போனாலும் சிவாவை பற்றி எல்லோரும் பாசமாக கேட்கிறார்கள். அது தான் அவர் இந்த சினிமாவில் சம்பாதித்ததாக நான் நினைக்கிறேன் என்றார் நடிகர் சூரி.

பொன்ராம் சாரும், ராஜா சாரும் நெகடிவ் கேரக்டர் ஒண்ணு இருக்கு, பண்றீங்களா என கேட்டனர். ரொம்ப சவாலான கதாபாத்திரம். நான் கண்டிப்பா பண்றேன் என்றேன். சவாலான கதாபாத்திரங்கள் எனக்கு பிடிக்கும், அதனால் தான் பண்றேன். இது ஒரு பக்கா கமெர்சியல் படமாக வந்திருக்கிறது என்றார் நடிகை சிம்ரன்.

காதல், காமெடி என வழக்கமான படமாக இல்லாமல் ஏதாவது புதுசா பண்ணனும்னு நினைத்தோம். அதை தயாரிப்பாளரிடம் சொன்னபோது பட்ஜெட் பற்றி தயங்காமல் உடனே ஓகே சொன்னார். மண்ணுக்காக போராடுவது அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது.

அப்படி ஒரு விஷயம் இந்த படத்தில் இருக்கு. கதை கேட்டவுடன் நெகடிவ் கேரக்டர் நான் பண்றதில்லையே என்றார் சிம்ரன் மேடம். பின்னர் கதையின் விஷயங்களை புரிந்து கொண்டு நடிக்கிறேன் என சொன்னார். ஒரு நாயகியை பாடலுக்கு மட்டும் தான் பயன்படுத்துறாங்க என்ற குறை இருக்கு.

இதில் சமந்தாவுக்கு நிறைய முக்கியத்துவம் இருக்கிறது. அதற்காக அர்ப்பணிப்புடன் சிலம்பம் கற்றுக் கொண்டார். பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகும்போதும் ராஜா சார் பண்ணுங்க என நம்பிக்கையோடு சொன்னார். குடும்பம், குழந்தைகள் என எல்லோரும் வந்து பார்க்கும் படமாக சீமராஜா இருக்கும் என்றார் இயக்குனர் பொன்ராம்.

இந்த ட்ரெய்லரின் கடைசி 3 ஷாட் பார்த்து சமூக வலைத்தளங்களில் பாகுபலி மாதிரி இருக்கு என பாராட்டுக்கள் இருந்தன. அது எங்களுக்கு, எங்கள் உழைப்புக்கு கிடைத்த பெருமை. இந்த படத்தை விநாயகர் சதூர்த்திக்கு வெளியிட திட்டமிட்டபோதே இடையில் ஸ்ட்ரைக் வந்தது.

அதையும் தாண்டி படத்தை குறித்த தேதிக்கு வெளியிட உழைத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுக்கள். படத்தில் நான் ஒரு தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான விஷயம்.

ரஜினி முருகன் படத்தின்போதே இந்த ஐடியா பற்றி பொன்ராம் சாரும், நானும் பேசினோம். இந்த படத்தில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள் குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம். இந்த படத்திலும் காமெடி நிறையவே இருக்கிறது. என்றார் நாயகன் சிவகார்த்திகேயன்.

இந்த விழாவில் கலை இயக்குனர் முத்துராஜ், VFX சூப்பர்வைஸர் பிஜாய் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

Sivakarthikeyan acted as Tamil King in Seemaraja It goes viral like Baahubali getup

17 ஆண்டுகளுக்கு பிறகு களவாணி மாப்பிள்ளை பட தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் இந்த அனைத்து படங்களையும் இயக்கியவர்.

அந்த கால கட்டத்தில் வணிக ரீதியான சக்சஸ் புல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப் பட்டவர் மணி வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மறைந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது.

மணிவாசகத்தின் மகனான காந்திமணிவாசகம் தயாரித்து, இயக்கும் “ களவாணி மாப்பிள்ளை “ படத்தில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார்.

மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் காந்தி மணிவாசகம் அவர்களிடம் கேட்டோம்…

இரண்டு மணி நேரம் மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்கிற நோக்கில் எடுக்கப் பட்டிருக்கும் படமே களவாணி மாப்பிள்ளை.

பெண்களின் மனோபாவமே இந்த படத்தின் மையக்கரு. பெண்கள் காய்கறி கடைக்குப் போனால் அரை கிலோ வெண்டைக்காய் வாங்க கால் கிலோ வெண்டையை உடைத்து உடைத்துப் பார்த்துத் தான் வாங்குவார்கள்.

அதே மாதிரி ஒரு புடவை வாங்க ஒரு கடையையே புரட்டிப் போட்டு விடுவார்கள்.

அவ்வளவு பார்த்து பார்த்து எச்சரிக்கையாக நடந்து கொள்ளும் அவர்கள் தடுமாறும் இடமும் தடம் மாறும் இடமும் திருமண விஷயத்தில் தான்…அந்த ஒரு விஷயத்தில் மட்டும் எப்படி கோட்டை விடுகிறார்கள் என்பது மட்டும் இன்று வரை சிதம்பர ரகசியமே.

அப்படித் தான் தான் ஏமாந்து போய் கல்யாணம் செய்து கொண்டது போல் தன் மகளுக்கு நடந்து விடக் கூடாது என்று நினைத்து ஏங்கும் ஒரு தாயின் போராட்டமும், தன் காதல் தான் முக்கியம் என்று நினைக்கும் மகளின் என்ன ஓட்டமும் தான் படத்தின் கதையோட்டம். இறுதியில் ஜெயித்தது தாயா மகளா என்பது தான் திரைக்கதை.

படத்தில் தினேஷின் கதாபாத்திரம் தான் கதையின் ஆணி வேர்…தூள் கிளப்பி இருக்கிறார் தினேஷ்.

படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது என்றார் இயக்குனர் காந்தி மணிவாசகம்.

ஒளிப்பதிவு – சரவண்ணன் அபிமன்யு

இசை – என்.ஆர்.ரகுநந்தன்

பாடல்கள் – மோகன்ராஜன், ஏக்நாத்

கலை – மாயா பாண்டி

எடிட்டிங் – பொன் கதிரேசன்

நடனம் – தினேஷ்

ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்

தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன்

நிர்வாக தயாரிப்பு – ஸ்டில்ஸ் ராபர்ட்

இணை தயாரிப்பு – திருமூர்த்தி

தயாரிப்பு – ராஜேஸ்வரி மணிவாசகம்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – காந்தி மணிவாசகம்.

3 ஆண்டில் 4500 இடங்களில் வாய்ப்பு தேடிய *60 வயது மாநிறம்* அருள் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கூட்டத்தில் வரும் ஒருவராக முகம் காட்டியதிலிருந்து குறிப்பிட்டுச் சொல்லும் வில்லன் நடிகர் என்கிற நிலையை எட்டியிருப்பவர் நடிகர் அருள் .

மெல்ல மெல்லப் படியேறி வில்லன் நடிகர்நிலை வரை உயர்ந்து இருக்கிறார். இருந்தாலும் இப்போதும் படிப்படியாக முன்னேறவே ஆசை என்கிறார்.

நடிகர் அருள் தன் முன் கதைச் சுருக்கத்தைக் கூறுகிறார் :

” எனக்குச் சினிமா மீது எதனால் எப்படி ஆர்வம் வந்தது என்று அவ்வளவு சரியாகச் சொல்ல முடியாது. அப்படி ஒரு ஈர்ப்பு சினிமா மீது . நான் பி.எஸ்ஸி தொடங்கி எம்.பி.ஏ வரை பல படிப்புகள் முடித்தேன். ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலையில் இருந்தேன்.

மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினேன் . எனக்குச் சினிமா ஆர்வம் வந்ததும் ஒரு கட்டத்தில் அதாவது 2009-ல் வேலையை விட்டு விட்டேன். முதலில் எனக்கு இயக்குநராக வேண்டும் என்று தான் ஆசை இருந்தது.

2010 -ல் பாலுமகேந்திரா சாரைப் போய்ப் பார்த்தேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்தவர். உனக்கு நாற்பது வயதாகிறது. நீ நடிக்க முயற்சி செய்வதே உனக்குப் பாதுகாப்பு என்றார்.

பிறகு கூட படம் இயக்கலாம். இப்போது நடிகனாகப் பயிற்சி எடு என்று அவரது சினிமாப் பட்டறையின் நடிப்புப் பயிற்சி மாணவனாக்கிக் கொண்டார். ஆறு மாத காலப் பயிற்சி.

அது குருகுலவாசம் போன்றது. வெறும் நடிப்பு மட்டுமல்லாது சினிமாவின் பல பரிமாணங்களையும் செயல்பாடுகளையும் சொல்லித் தந்தார், பல உலகத்தரமான படங்களைப் போட்டுக் காட்டி அதன் சிறப்புகளைச் சொல்வார். எனக்கு நம்பிக்கை வந்தது. அதன் பின் வெளியே வந்து வாய்ப்பு தேடினேன். சில குறும்பட வாய்ப்புகளில் நடித்தேன்.

அப்படி நிறையவே வாய்ப்புகள் வந்தன இப்படியே 2014 வரை 32 குறும்படங்கள் , 18 விளம்பரங்கள் என்று நடித்தேன். ஒரு கட்டத்தில் இவற்றை நிறுத்திக் கொண்டு சினிமா தான் என்று வாய்ப்பு வேட்டையில் இறங்கினேன். ” என்று சற்றே நிறுத்தினார்.

சினிமாவில் வாய்ப்பு எளிதில் கிடைத்ததா? என்ற போது ,

“போய் வாய்ப்பு கேட்டதுமே கிடைத்துவிடும் என்று நான் கற்பனை செய்து கொள்ளவில்லை. போராடித்தான் இலக்கை அடைய முடியும் என்று நம்பினேன்.

தினமும் அலுவலகம் செல்வது போல சாப்பாட்டு மூட்டையுடன் கம்பெனி கம்பெனியாக படியேறுவேன். முகவரி தெரிந்த ஒருவரையும் கூட அழைத்துக் கொண்டு படியேறுவேன். இப்படி 3 ஆண்டுகளில் சுமார் 4500 இடங்களில் வாய்ப்பு கேட்டு இருப்பேன்.

முதலில் கூட்டத்தில் ஒருவராக வரும் வாய்ப்பு வந்தது. பிறகு முகம் தெரியும்படி வந்த முதல் படம் முரண். பிறகு எங்கேயும் எப்போதும், எதிர் நீச்சல், மாற்றான் போன்ற 18 படங்களில் மூன்று நான்கு காட்சிகளில் நடித்திருப்பேன்.

முதலில் விடியும் முன் படத்தில் 3 வில்லன்களில் ஒருவனாக வருவேன். நல்ல அடையாளமாக இருந்தது. பிறகு கவனம், அமரகாவியம் ,விழி மூடி யோசித்தால் , சிங்கம் போன்ற படங்கள்.

குறிப்பாக ஜீவாசங்கரின் அமர காவியம் மறக்க முடியாது. அதில் 16 காட்சிகளில் வந்தேன். எமன் படத்தில் வயதான வில்லன் வேடத்தில் நடித்தேன் என் நடிப்பை பலரும் பாராட்டினர் அந்த படத்தில் நான்தான் வில்லன் என்பது வெளியில் நிறைய பேருக்கு தெரியாது.

வயதான கெட்டப் அந்த மாதிரி. பிறகு துருவங்கள் 16ல் நல்ல அடையாளம் கிடைத்தது. அதே கார்த்திக் நரேனின் நரகாசுரன் படத்தில் என்னை நம்பிக்கையுடன் அழைத்து வாய்ப்பு கொடுத்துள்ளார்.

இப்போது 60 வயது மாநிறம் படத்தில் என் பாத்திரம் பெயர் சொல்லும்படி நல்ல வாய்ப்பாக இருக்கும். இப்போது குற்றம் புரிந்தால், உணர்வு உள்பட 5 புதிய படங்களில் நடித்து வருகிறேன்” என்கிறார்.

நடிப்பில் எது இவரது எதிர்பார்ப்பு ? என்று கேட்டால் , ” சிறிய படம் பெரிய படம் என்கிற பாகுபாடு நான் பார்ப்பதில்லை, நமக்கு நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று மட்டுமே பார்ப்பேன்.

நான் இயக்குநரின் நடிகன். அவரது கைப்பாவையாக இருக்க,வே விரும்புகிறேன். ஒரே நாளில் உயரம் தொட விரும்பவில்லை. திடீரென்று மேலே வர ஆசைப்படவில்லை. ஸ்லோ அண்ட் ஸ்டெடியாக படிப்படியாக முன்னேறவே ஆசை. ” என்கிறார் உறுதியான நம்பிக்கையுடன்.

குரு சோமசுந்தரத்தின் வஞ்சகர் உலகத்தில் ஹாலிவுட் ஒளிப்பதிவாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லாபிரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மனோஜ் பீதா இயக்கியிருக்கும் படம் ‘வஞ்சகர் உலகம்’. குரு சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், அழகம் பெருமாள், ஜான் விஜய், அனிஷா அம்ப்ரோஸ் நடித்திருக்கும் இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.

செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் படத்தின் 25 நிமிட காட்சிகள் பிரத்யேகமாக ரசிகர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

சினிமாவில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அது தான் என்னை இந்த படத்தில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

முதல் இரண்டு ரீல்களை பார்த்திருப்பீர்கள், இன்னும் நிறைய ஸ்பெஷலான விஷயங்கள் இந்த படத்தில் இருக்கின்றன என்றார் நடிகர் விசாகன்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ஆரண்ய காண்டம் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் குரு சோமசுந்தரம். அதற்கு பிறகு ஜோக்கர் உட்பட எல்லா படத்திலும் சிறப்பான நடிப்பை வழங்கி வருகிறார்.

அவருடன் இந்த படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவரை ஓரம்போ படத்துக்கும், கபாலி படத்துக்கும் டிக்கெட் வாங்கி படம் பார்த்தேன். அடுத்து இந்த படத்தை தான் நான் தியேட்டரில் பார்க்க ஆசைப்படுகிறேன். இயக்குனர் என்னை ரொம்பவே படுத்தி எடுத்து விட்டார்.

வஞ்சகர் உலகத்தில் யுவனுக்கு கைகொடுக்கும் மாதவன்

ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்தார், படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது என்றார் நடிகர் ஜான் விஜய்.

இந்த மாதிரி ஒரு கதாபாத்திரம் எனக்கு 10 படம் நடித்த பிறகாவது வருமா என தெரியவில்லை. அப்படி ஒரு கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியிருக்கிறார்கள்.

சாம் சிஎஸ், ஆண்டனி, ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ரோட்ரிகோ ஆகியோரால் இந்த படத்தின் தரம் மேலும் உயர்ந்திருக்கிறது என்றார் நசிகர் சிபி புவன சந்திரன்.

இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் நான் உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கிறேன். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறேன். நான், மனோஜ், சிபி எல்லோரும் பள்ளி நண்பர்கள்.

கதை விவாதம் செய்யலாம் என மனோஜ் என்னை அழைத்தார்.

வஞ்சகர் உலகத்திற்கு யுவனை அழைத்து வந்த சாம். சி.எஸ்

அப்போது முதல் படத்துக்கு என்னிடம் ஒரு கதை இருக்கு என சொன்னேன், அது அவர்களுக்கும் மிகவும் பிடித்தது. முக்கியமாக கிளைமாக்ஸ் மிகவும் விரும்பினார்கள். குரு சோமசுந்தரம் சிறப்பாக நடித்து, கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். மற்ற நடிகர்கள் எல்லோருமே சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள் என்றார் வசனகர்த்தா வினாயக்.

வஞ்சகர் உலகம் ஒரு கேங்க்ஸ்டர் படம், முழுக்க முழுக்க ஆண்களை சுற்றிய படமாக இருந்தாலும் ஒரு வலுவான பெண் கதாபாத்திரத்தை எழுதிய இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

சாம் சிஎஸ் பல பெரிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார், ஆனால் இந்த படம் அவருக்கு பாராட்டுகளை பெற்றுத் தரும். ட்ரெய்லருக்கு கிடைத்த அதே வரவேற்பு படத்துக்கும் கிடைக்கும் என நம்புகிறேன் என்றார் நாயகி சாந்தினி தமிழரசன்.

மனோஜ் பீதா எனக்கு கதையை சொன்னபோது நீங்க கேங்க்ஸ்டர்னு சொன்னார். முதலில் ஆச்சர்யமாக இருந்தாலும் உடனடியாக ஒப்புக் கொண்டேன்.

கதாபாத்திரத்தை மெறுகேற்ற நிறைய வேலைகள் இருந்தன. விக்ரம் வேதாவுக்கு பிறகு சாம் சிஎஸ் மிகச்சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார், தமிழ் சினிமாவில் இந்த படம் ஒரு சிறப்பான இடத்தை பிடிக்கும் என்றார் குரு சோமசுந்தரம்.

விக்ரம் வேதா முடிந்தவுடன் மனோஜ் ஒரு கேங்க்ஸ்டர் படம், மியூசிக் பண்றீங்களானு கேட்டார். ஷூட்டிங் ஸ்பாட் போனேன், ஷூட் பண்ண ஒரு சில காட்சிகள் பார்த்தேன், எந்த மெறுகேற்றலும் இல்லாமலேயே ஹாலிவுட் தரத்தில் இருந்தது.

மனோஜ் பீதா இயக்கத்தில் ஜோக்கர் நாயகன் நடிக்கும் வஞ்சகர் உலகம்

இந்த படத்துக்கு எந்த செயற்கையான விஷயங்களையும் செய்யவில்லை. வழக்கமான ஒரு படமாக இருக்க கூடாது என்று நினைத்தோம். நேர்மையாக எனக்கு பிடித்ததை செய்திருக்கிறேன்.

இந்த கதையில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் சரிசமமான முக்கியத்துவம் இருக்கிறது. நல்ல தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள். யுவன், சந்தோஷ் நாராயணன், ஸ்வாகதா ஆகியோர் இந்த படத்தில் பாடியிருக்கிறார்கள் என்றார் சாம் சிஎஸ்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் திரைக்கதை எழுத மற்றும் முன் தயாரிப்பு பணிகளுக்காக எடுத்துக் கொண்டோம். குறிப்பிட்ட பட்ஜெட்டில் படம் எடுப்பது ரொம்பவே கஷ்டம். ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் இருந்தன. சரியான திட்டமிடல் மூலம் ஒளிப்பதிவாளர் ரோட்ரிகோ நல்ல காட்சிகளை கொடுத்திருக்கிறார்.

நான் செல்வராகவன் சாரின் பெரிய ரசிகன். நாங்கள் பள்ளியில் படிக்கும்போது கட் அடித்து விட்டு போய் பார்த்த படம் புதுப்பேட்டை. அந்த படம் பார்த்தபோதே நாங்கள் படம் எடுத்தால் அழகம் பெருமாள் அந்த படத்தில் இருக்கணும்னு நினைத்தோம். சமூகத்தில் பாதிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வது தான் இந்த படம்.

குரு சோமசுந்தரம் மைய கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தார். நிறைய இடங்களில் அலட்டல் இல்லாமலே சைலெண்டாக நடித்திருப்பார். சாம் சிஎஸ் பல நேரங்களில் உந்துதலாக இருந்தார். முதல் படம் நானே எழுதி இயக்குவதில் எனக்கு உடன்பாடே இல்லை. மேற்கத்திய தாக்கத்தில் படம் இருக்க திட்டமிட்டு உழைத்தோம்.

சாந்தினி படத்தின் மிகப்பெரிய பலம். ஜான் விஜய் பாடி லாங்குவேஜ் புதிதாக இருக்கும். 4 மணி நேரம் இருந்த படத்தை எடிட் செய்து மிகச்சிறப்பாக கொடுத்திருக்கிறார் ஆண்டனி. ‘ஏ’ சான்றிதழ் கொடுப்பதற்கு பதில் 18+ என கொடுத்தால் நன்றாக இருக்கும். ‘ஏ’ என்றால் அது வேறு மாதிரி நினைக்கிறார்கள் என்றார் இயக்குனர் மனோஜ் பீதா.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சண்டைப்பயிற்சியாளர் ஸ்டன்னர் ஷாம், ஹாலிவுட்டைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ரோட்ரிகோ, நடிகர்கள் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், அழகம் பெருமாள், எடிட்டர் ஆண்டனி, பாடகி ஸ்வாகதா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

காக்கா முட்டை-அருவி வரிசையில் *யு டர்ன்* இடம்பெறும். : ஆதி நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, வி.ஒய். கம்பைன்ஸ் மற்றும் பிஆர்8 கிரியேஷன்ஸ் சார்பில் ராம்பாபு பண்டாரு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்திருக்கும் படம் ‘யு-டர்ன்’.

கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘யு-டர்ன்’ படத்தின் ரீமேக் இது. கன்னட ஒரிஜினல் படத்தை இயக்கிய பவன்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சமந்தா அக்கினேனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், பூமிகா சாவ்லா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகும் இந்த படத்தின் தமிழ் பதிப்பை கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் தனஞ்செயன் வெளியிடுகிறார்.

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தினார்.

இந்த யு-டர்ன் கன்னடத்தை விட மேம்பட்ட வடிவமாக இருக்கும். பெரிய பட்ஜெட்டில் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கிறது.

தமிழ், தெலுங்குக்கு ஏற்ப திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறோம். கடைசி 30 நிமிடங்கள் மிகவும் திரில்லாக இருக்கும். கன்னட படம் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனபோதே சமந்தா என்னிடம் பேசினார். அவருக்காக தான் இந்த ரீமேக் படத்தையும் நானே இயக்க ஒப்புக் கொண்டேன்.

*சீமராஜா* சிவகார்த்திகேயனுக்கு எதிராக *யு-டர்ன்* அடிக்கும் சமந்தா

சமந்தா, ராகுல் ஆகியோரிடம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் கற்றுக் கொண்டேன். தமிழ் ரசிகர்கள் பல நல்ல சினிமாக்களை பார்த்தவர்கள், இந்த படத்தையும் அங்கீகரிப்பார்கள் என நம்புகிறேன் என்றார் இயக்குனர் பவன் குமார்.

பவன் குமாரின் லூசியா தமிழில் ரீமேக் செய்தபோது அதிலும் நான் நடித்தேன், இன்று அவர் இயக்கத்தில் தமிழிலேயே நடித்தது மகிழ்ச்சியான விஷயம். சமந்தா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தெலுங்கு வசனங்களில் நான் தடுமாறும் போது எனக்கு ஆதி உதவியாக இருந்தார் என்றார் நடிகர் ஆடுகளம் நரேன்.

நான் ஒரு சென்னை பையன். தமிழில் தான் அறிமுகம் ஆனேன். நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்தது மகிழ்ச்சி. இயக்குனர் பவன் ரொம்ப தெளிவானவர், அவருக்கு என்ன தேவையோ அதை சரியாக கேட்டு வாங்குவார்.

சமந்தாவின் யு-டர்ன் கூட்டணியில் இணைந்தது ஏன்..? – தனஞ்செயன் விளக்கம்

10 வருடங்கள் கழித்து சமந்தாவுடன் மீண்டும் நடிக்கும்போது அவர் ஒரு சிறந்த நடிகையாக உருவாகியிருப்பதை பார்க்கிறேன். படத்தின் கடைசி 30 நிமிடங்கள் நிறைய மாற்றியிருக்கிறார், நிறைய ட்விஸ்ட் இருக்கு என்றார் நடிகர் ராகுல் ரவீந்திரன்.

வாழ்வில் சில விஷயங்களை நாம் தேர்ந்தெடுப்போம், ஆனால் சினிமாவில் நல்ல கதைகள் நம்மை கேட்கும்போது நடித்து விட வேண்டும்.

குறைந்த பட்ஜெட்டில் மிகச்சிறப்பான படத்தை கொடுப்பது என்பது தான் மிக சவாலான விஷயம். அதனால் தான் பவன் குமார் படம் நடிக்கிறீங்களா என கேட்டவுடனேயே அவருக்காகவே நடிக்க ஓகே சொன்னேன்.

சமீப காலங்களில் காக்கா முட்டை, அருவி போன்ற படங்களை ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள். அது மாதிரியான ஒரு படம் தான் இது. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

அடுத்து 3 தமிழ் படங்களில் நடிக்க போகிறேன், அடுத்த இரண்டு வருடங்கள் சென்னைல தான் இருக்க போறேன் என்றார் நடிகர் ஆதி.

ட்ரெய்லர் ரிலீஸ் ஆனபோது 2 மில்லியன் வியூஸ் போகும், ரசிகர்கள் இவ்வளவு பெரிய ஆதரவு தருவார்கள் என நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த படத்தில் யாரும் நாயகன், நாயகி என இல்லை. கதை தான் படத்தின் மிகப்பெரிய ஹீரோ.

லூசியா படத்தில் இருந்தே நான் பவன் குமாரின் பெரிய ரசிகை. அப்போதே இவருடன் ஒரு படம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். இந்த படத்தில் அது நிறைவேறியிருக்கிறது. இந்த படம் வெறும் திரில்லர் மட்டுமல்ல. இது ஒரு பெரிய பயணம். எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கியது.

‘யு-டர்ன்’ நாயகி ஷ்ரதா ஸ்ரீநாத்தை வளைத்து போட்ட கௌதம்

முழு மூச்சில் ஒரே கட்டமாக இந்த படத்தை முடித்தோம். தமிழில் தனஞ்செயன் சார் ரிலீஸ் செய்கிறார். இப்போது பாதுகாப்பான கைகளில் இந்த படம் இருப்பதாக உணர்கிறேன். மிகவும் யதார்த்தமாக கதாபாத்திரங்களில் நடிக்க எப்போதுமே ஆசை.

அது தான் இந்த படத்துக்குள் என்னை கொண்டு வந்தது. படத்தில் நிறைய எமோஷனல் காட்சிகள் உண்டு. எனக்கு கிளிசரின் போட்டு நடிப்பது பிடிக்காது. கஷ்டப்பட்டு ஒரு காட்சியில் நடித்த முடித்தவுடன் இன்னொரு மொழியில் அதே காட்சியை நடிக்க வேண்டும்.

அது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஹீரோக்கள் மீதான சுமை எப்படி இருக்கும் என்பதை இந்த படத்தில் நான் உணர்கிறேன் என்றார் நாயகி சமந்தா அக்கினேனி.

நான் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்க முயற்சித்தேன். ஆனால் அதை வாங்க முடியவில்லை. எப்படியாவது இந்த படத்தில் நானும் பங்கு பெற வேண்டும் என நினைத்தேன். அது தான் இந்த படத்தை நான் ரிலீஸ் செய்ய வைத்திருக்கிறது.

சமந்தா இல்லாமல் இந்த படம் உருவாகியிருக்காது. புது விதமான, சீரியஸான சமந்தாவை இந்த படத்தில் பார்ப்பீர்கள். சமந்தா நடித்த சமீபத்திய படங்கள் எல்லாம் 100 நாட்கள் ஓடி வருகின்றன. இந்த படமும் நிச்சயம் நல்ல வசூலைக் கொடுக்கும்.

இந்த படத்தின் ஒரிஜினல் கன்னட பதிப்பை 10 தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறேன், எல்லா கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்திருந்தார். அது தான் படத்தின் ஹைலைட். இந்த படத்தில் அதை விடவும் அதிகமாகவே உழைத்திருக்கிறார் என்றார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

இந்த சந்திப்பில் தயாரிப்பாளர்கள் ஸ்ரீனிவாச சித்தூரி, ராம்பாபு பண்டாரு ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

More Articles
Follows