தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என சினிமாவில் பன்முகம் காட்டிய சரத்குமார் சமீபகாலமாக அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதனிடையில் சில விளம்பரங்களிலும், சினிமாவிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் 11ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.
அக்கட்சியின் பொது செயலாளர் சரத்குமார் அப்போது பேசியதாவது…
ஜெயலலிதா இருந்தவரை அரசியல் பற்றி பேசாத ரஜினி-கமல் இருவரும் தற்போது அரசியல் குறித்து பேசுவது ஏன்?
அரசியல் குடும்பத்திலிருந்து வந்த தனக்கு தமிழக முதலமைச்சராகும் தகுதி உள்ளது.
முதலமைச்சர் பதவி என்பது ஒரு சிலருக்கு மட்டும்தான் தானாக கிடைக்கும். கடுமையான உழைப்பால் மட்டுமே ஒருவர் முதலமைச்சர் ஆக முடியும். என்று பேசினார்.
மேலும் சினிமாத்துறையினரை தான் பகைத்து கொள்ள விரும்பவில்லை என்றும் ரஜினி-கமல் தனக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் இதுவரை ரஜினியின் கடவுள் பேசிவிட்டாரா? எனத் தெரியவில்லை. சினிமா பிரச்சினையில் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கூறிய கமல் இப்போது அரசியல் ஏன் பேச வேண்டும்.
அவரின் ட்விட்டர் பதிவுகளை பார்த்து மக்கள் திசை திரும்ப கூடாது. என்று கேள்விகளை எழுப்பினார்.
விரைவில் கமலின் ட்விட்டர் பதிவுகளுக்கு தெளிவுரை எழுத தயாராக இருப்பதாகவும், தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு அ,ஆ எழுதியவன் நான் என்றும்
பேசினார்.
இறுதியாக தி.மு.க.வை விட்டு வெளியேறிய நான் கட்சி மாறுபவன் அல்ல என்றும் அரசியல் குறித்து யாருடன் வேண்டுமானலும் விவாதிக்க தயார் என்றும் சவால் விடுத்தார் சரத்குமார்.
I have eligibility to become Chief Minister says Sarathkumar and he challenge to Rajini Kamal