தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலேசியா நாட்டில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்டார் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறது.
இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே அங்கு திரண்டுள்ளது.
இதனால் நேற்றும் இன்றும் எந்தவிதமான படப்பிடிப்புகளும் தமிழகத்தில் நடைபெறவில்லை.
இந்த கலை நிகழ்ச்சிகள் மூலம் திரட்டப்படும் நிதி, நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்திற்கும் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ரஜினிகாந்த் பேசும்போது…
நீங்கள் யாரிடம் க்ளீன் போல்ட் ஆகியிருக்கிறார்கள் என்று ரஜினியிடம் சுஹாசினி கேட்டார். அதற்கு ரஜினி யாரிடமும் இல்லை என்றார்.
எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். கிரிக்கெட்டில் என்னுடைய தற்போதை பேவரைட் தோனி. எப்போதும் பேவரைட் சச்சின் டெண்டுல்கர்தான்” என்றார்.
மேலும் அவர் பேசியதாவது…
நான் கபாலி சூட்டிங் சமயத்தில் மலேசியா வந்தேன். தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்துள்ளேன்.
மலேசிய மக்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி. இந்த நாடு என்னுடைய 2வது வீடு போன்றது.
உங்களுடன் நிறைய பேச வேண்டும். மற்றொரு முறை நிச்சயம் பேசுவேன்.
என்னை வாழ வைத்த தமிழக மக்களை நன்றாக வாழ வைப்பேன். அதுதான் என் ஆசை” என்று நெகிழ்ச்சியாக பேசினார் ரஜினிகாந்த்.
I want give good life to TN peoples as they gave me says Rajini at Natchathira Vizha 2018