ரஜினி விரும்பினால் அரசியல் பேசத் தயார்… கமல் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரபரப்பான சினிமாக்களை விட தற்போதுள்ள அரசியல் நிகழ்வுகள் தமிழக மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

அதிலும் முக்கியமாக கமலின் சூடான அரசியல் கருத்துக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், இன்று சற்றுமுன் சென்னையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கமல் பேசினார்.

அப்போது… மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வரத் தயார். அரசியலுக்கு வந்தபின் ரஜினியுடன் பேசத் தயார் என்றும் தெரிவித்தார்.

மேலும் ரஜினி விரும்பினால் அவருடன் அரசியலில் இணையவும் தயாராக இருக்கிறேன்.

அறவழியில் போராடுவதே ஆரம்பம், அகிம்சையின் உச்சக்கட்டம் போராட்டம். நான் தொழிலுக்காக நடிக்கிறேன், சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர் என்றும் கமல் குறிப்பிட்டார்.

If Rajini wish he can join in my Political party says Kamal

தனுஷ் உடன் இணையும் பகத்பாசில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதன்முறையாக மலையாள சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக நுழைந்துள்ளார் தனுஷ் என்பதை பார்த்தோம்.

டோமினிக் என்பவர் இயக்கி வரும் இப்படத்திற்கு தரங்கம் என பெயரிட்டுள்ளனர்.

என்னு நிண்டே மொய்தீன்’, ‘சார்லி’, ‘ஒரு மெக்சிகன் அபரதா’ ஆகிய படங்களில் நடித்த டோவினோ தாமஸ் நாயகனாக நடித்து வருகிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி மலையாள ரசிர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இதன் ட்ரைலரை பகத்பாசில் மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து இன்று வெளியிடுகின்றனர்.

Dhanush and Fahad Fazhil jointly releasing Tharangam Teaser

பிரியதர்ஷன்-உதயநிதி இணையும் பட தலைப்பு முடிவானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் ஹிட் அடித்த ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் ரீமேக் தமிழில் இயக்கி வருகிறார் பிரியர்ஷன்.

இப்படத்தில் உதயநிதி, நமீதா பிரமோத், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்க, தர்புகா சிவா இசையமைத்து வருகிறார்.

சூட்டிங் தொடங்கி நடைபெற்று வந்தாலும் இதுவரை படத்திற்கு பெயரிடாமல் காத்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்துக்கு ‘நிமிர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Udhayanidhi Priyadarshan combo movie titled Nimir

விக்ரம் முதல் விஜய்சேதுபதி வரை; ட்ராக் மாறும் தமிழ் படத்தலைப்புகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கருணாநிதி முதல் அமைச்சராக இருந்தபோது, தமிழில் தலைப்பு வைத்தால்தான் தமிழக அரசின் கேளிக்கை வரியிலிருந்து விலக்கு கிடைக்கும் என அறிவித்தார்.

அப்போது ரஜினியின் ரோபா படத்திற்கு எந்திரன் என பெயரிட்டனர்.

பின்னர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழில் தலைப்பு வைத்தாலும் தரமான படமாக இருந்தால் மட்டுமே வரிவிலக்கு கிடைக்கும் என அறிவித்தார்.

இதில் சில அரசியல் குளறுபடியாக இருப்பதும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியுடன் தமிழக அரசின் வரியும் சேர்ந்திருப்பதால், இனி கேளிக்கை வரிவிலக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாக்களுக்கு இங்கிலீஷ் டைட்டில் வைக்கும் ட்ரெண்ட் அதிகரித்து வருகிறது.

விக்ரம் நடித்து வரும் ஸ்கெட்ச், விஜய்சேதுபதியின் ஜுங்கா, சூப்பர் டீலக்ஸ், மகேஷ்பாபுவின் ஸ்பைடர், வெங்கட்பிரபுவின் பார்ட்டி, லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ என வரிசை கட்டி நிற்கின்றன.

ரஜினி-கமல்-விஜய்-விஷால் அரசியலுக்கு வரட்டும்.. சீமான் ஓபன்டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தங்கள் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துள்ளனர்.

இவர்களின் கட்சி அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் இவர்களின் வருகை குறித்து நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களிடம் கேட்கப்பட்டது.

இதுகுறித்து அவர் பேசும்போது…

ரஜினிகாந்த் வரட்டும், கமல்ஹாசன் வரட்டும். விஜய், விஷால் கூட வரட்டும்.

நடிகர்கள் யார் வேண்டுமானாலும் வரட்டும்.

அரசியலுக்கு வந்த பின்தான், அவர்களுக்கு நாட்டை ஆள நடிப்பு திறமை மட்டும் போதாது என்பது தெரியும்” என்று பேசினார்.

Any actors can come to Politics Says Naam Tamilar Party leader Seeman

அறிவழகன் இயக்கத்தில் இணையும் ராஜ்கிரண்-நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் தயாரித்த ‘ஈரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அறிவழகன்.

அருண்விஜய் நடிப்பில் உருவான ‘குற்றம் 23’ படத்தை அண்மையில் இயக்கியிருந்தார் அறிவழகன்.

இந்நிலையில் இவரின் அடுத்த படத்தில் மஞ்சு வாரியர் நடிப்பார் என கூறப்பட்டது. அவருடன் முக்கிய வேடத்தில் ராஜ்கிரனும் நடிக்கவிருந்தார்.

தற்போது மஞ்சு வாரியருக்கு பதிலாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More Articles
Follows