சினிமாவில் இணையும் பிக்பாஸ் ஜோடி ஆரவ்-ஓவியா..?

சினிமாவில் இணையும் பிக்பாஸ் ஜோடி ஆரவ்-ஓவியா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aarav oviyaகமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து இவர் தன் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடினார்.
அப்போது பலரும் ஓவியாவுடனான காதல் குறித்து கேள்வி கேட்டனர்.

விரைவில் என் முதல் பட அறிவிப்பை வெளியிடுவேன்.

ஓவியா எனக்கு நல்ல நண்பர். பிக்பாஸ்க்கு பிறகு அவரை நான் இன்னும் சந்திக்கவில்லை.

அவரை சந்தித்தபின் அந்த படத்தை இணையத்தில் பகிர உள்ளேன்.

அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன்.” என்று தன் பதில்களை பதிவிட்டுள்ளார் ஆரவ்.

நாளை சமந்தா-நாக சைதன்யா திருமணம்; 10 கோடி பட்ஜெட்

நாளை சமந்தா-நாக சைதன்யா திருமணம்; 10 கோடி பட்ஜெட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

samantha naga chaitanyaதென்னிந்தியாவில் பிரபலமான நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் மறைந்த நாகேஸ்வரராவின் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை நாளை திருமணம் செய்யவிருக்கிறார்.

இவர்களது திருமணம் நாளை கோவாவில் இந்து முறைப்படியும், மறுநாள் 7-ம் தேதி கிறிஸ்தவ முறைப்படியும் நடைபெறுகிறது.

கோவாவில் உள்ள ‘டபிள்யூ’ எனும் நட்சத்திர ஓட்டலில் இந்தத் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த ஓட்டலில் உள்ள ஒரு அறைக்கான தினசரி வாடகை ரூ.15 ஆயிரம் என கூறப்படுகிறது.

இந்த திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் 150 பேரை மட்டுமே அழைத்துள்ளதாக நடிகர் நாகார்ஜுனா தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் திருமண வரவேற்பை ஹைதராபாத்தில் நடத்தவுள்ளனர்.

இதற்கு ரூ. 10 கோடி பட்ஜெட் என கூறப்படுகிறது.

மீண்டும் விவேகம்; ரீ-ரிலீஸ் செய்ய தியேட்டர்கள் அதிபர்கள் முடிவு

மீண்டும் விவேகம்; ரீ-ரிலீஸ் செய்ய தியேட்டர்கள் அதிபர்கள் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegam Ajithநாளை அக்டோபர் 6ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாது என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

கேளிக்கை வரியை ரத்து செய்யும் வரை இப்போராட்டம் நடைபெறும் என விஷால் தெரிவித்திருந்தார்.

இதனால் புதிய படங்கள் இல்லாததால் பழைய படங்களை ரி-ரிலீஸ் செய்ய தியேட்டர் அதிபர்கள் சிலர் முடிவு செய்துள்ளார்களாம்.

அதன்படி அண்மையில் வெளியான அஜித்தின் விவேகம் படத்தை ரி-ரிலீஸ்செய்யவுள்ளனர்.

மேலும பல பழைய படங்களும் இந்த வரிசையில் இணையும் என எதிர்பார்க்கலாம்.

விஜய்யை விட அஜித்தான் நாட்டாமை ரீமேக்கில் செட்டாவார்… சரத்குமார்

விஜய்யை விட அஜித்தான் நாட்டாமை ரீமேக்கில் செட்டாவார்… சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nattamai stillsசரத்குமார் நடித்த படங்களிலேயே மாபெரும் வசூல் சாதனை படைத்த படம் நாட்டாமை.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படத்தில் சரத்குமார் இரு வேடங்களில் நடிக்க இவருக்கு ஜோடியாக குஷ்பூ, மீனா நடித்திருந்தனர்.

தற்போது ரீமேக் சீசன் என்பதால், இதன் ரீமேக்கில் அஜித், விஜய் இருவரில் யார் நடித்தால் நன்றாக இருக்கும்? என்று சரத்குமாரிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு விஜய்யை விட அஜித்தான் நாட்டாமை கேரக்டருக்கு செப் ஆவார் என சரத் தெரிவித்தாராம்.

அட… இதுக்கும் நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லுன்னு சொல்றீங்களா..?

இமயமலைக்கு சென்று வந்தபின் ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு

இமயமலைக்கு சென்று வந்தபின் ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Rajinikanthசினிமாவைப் போல் ஆன்மிகத்திலும் அதிகம் நாட்டம் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

எனவே தான் நடிக்கும் படங்கள் ஆனாலும், தான் தொடங்கும் எந்தவொரு முயற்சியானாலும் இமயமலைக்கு சென்று வந்தபின்னர்தான் முடிவு எடுப்பார்.

2.0 படத்தை முடித்துவிட்டு தற்போது காலா படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து அவர் அரசியலில் கவனம் செலுத்தவுள்ளார் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் உள்ள ஒரு மூத்த நடிகர் ஒருவர் அவருடைய கருத்தை தெரிவித்தபோது…
ஆன்மிக வழிகாட்டுதல் படி நடப்பவர் ரஜினிகாந்த். அவர் எதை செய்தாலும் அதற்கு முன்பு தன் குருநாதர் பாபாவிடம் ஆசி பெற்ற பின்னரே தொடங்குவார்.

எனவே அவர் இமயமலைக்குச் சென்று திரும்பிய பின், தன் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார்’’ என்றார்.

நிதின்சத்யா தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக ஜெய்

நிதின்சத்யா தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக ஜெய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jai signed to play the hero in Actor Nitinsathyaas maiden productionவெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை 28’ மற்றும் இதன் இரண்டாம் பாகத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

அதில் நடித்த நிதின் சத்யா தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் தயாரிக்கும் முதல் படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெபா மோனிகாஜான் நடிக்கிறார். இவர் இதற்கு முன் ‘ஜேக்கப்பிண்டே ஸ்வர்கராஜ்யம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் ரோபோ சங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெய் தற்போது சுந்தர்.சி இயக்கும் ‘கலகலப்பு 2’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jai signed to play the hero in Actor Nitinsathyaas maiden production

More Articles
Follows