தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2008ல் ஆரம்பமானது.
கடந்த 15 வருடங்களாக வெற்றிகரமாக நடந்து வருகிறது.
இந்த வருட ஐபிஎல் போட்டி, கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கியது.
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இந்த தொடரின் இறுதிப்போட்டி, அகமதாபாத்தில் நாளை (29-05-22) நடக்கவிருக்கிறது.
இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் பைனல் மேட்ச் நடக்கிறது.
இந்த ஆண்டில் புதிதாக சேர்க்கப்பட்ட இரண்டு அணிகளில் ஒன்றான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் ஆண்டிலேயே இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
நாளை இறுதி ஆட்டத்திற்கு முன்பாக கலை நிகழ்ச்சிகள் வழக்கம்போல நடைபெற உள்ளன.
இதில் ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இது தொடர்பான வீடியோ ஒன்றை ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.
கடந்த 75 வருடங்களாக பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
எனவே அதனைப் பெருமைப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி அமைய உள்ளது என ஏஆர். ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரலையிலும் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
Join me on a journey of the 8 decades of Indian Cricket that have redefined India at 75 as we pay the largest salute. pic.twitter.com/bhHAHPPyAm
— A.R.Rahman (@arrahman) May 27, 2022
IPL Final Match; AR Rahman Music Concert at Narendra Modi stadium