தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா தயாரித்து நடித்து அண்மையில் ஓடிடியில் வெளியான ‘ஜெய்பீம்’ படம் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் கமல் உள்ளிட்ட பலரும் பாராட்டிய நிலையில் வன்னியர் மக்களை இந்த திரைப்படம் காயப்படுத்தி விட்டதாக பாமகவினர் புகார் அளித்து வந்தனர்.
இந்த படத்தின் மையக்கருவான நிஜ ராஜாகன்னுவின் மனைவி பார்வதியை சந்தித்து நடிகர் சூர்யா ரூ 15 லட்சத்திற்கான வங்கி வைப்பு நிதி ஆதாரத்தை அளித்தார். நடிகர் லாரன்ஸ் பார்வதிக்கு வீடு கட்டித் தருவதாக உறுதியளித்துள்ளார்.
வன்னியர் பிரிவை சார்ந்த சிலர் நடிகர் சூர்யாவை உதைத்தால் பணம் தருகிறோம் என்றும் மிரட்டல் விடுத்தனர். எனவே போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தின் வசனகர்த்தா கண்மணி குணசேகரன் தான் சம்பளமாக பெற்ற ரூ. 50000 பணத்தை சூர்யாவுக்கே திருப்பி அனுப்பினார்.
இதனையடுத்து இயக்குனர் ஞானவேல் அவர்கள் படத்தின் காட்சிகளுக்கு நானே பொறுப்பு என வருத்தம் தெரிவித்து கடிதம் அனுப்பினார்.
இவ்வாறாக ஜெய்பீம் படத்திற்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் படத்திற்கு கிடைத்துள்ள நிலையில் மதுரையில் காட்டுநாயக்கன் பழங்குடி இன மக்கள் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர்.
மதுரையில் இன்று ஒன்று கூடிய காட்டுநாயக்கன் பழங்குடி இன மக்கள் சூர்யாவிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.
அவர்கள் தங்களில் கைகளில் எலி பாம்புகளுடன் வந்திருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெய்பீம் படத்தில் எங்களை பற்றி ஒரு அடையாளத்தை பதிவு செய்துள்ளார் சூர்யா. இதுவரை எந்த நடிகரும் இதை செய்யவில்லை. யாரும் எங்களை பற்றி பேசியதும் இல்லை.
அவருக்கு எதாவது தீங்கு நேர்ந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது பாம்பையும் விட தயங்கமாட்டோம் என்று கூறியுள்ளனர்.
மேலும், அவருக்கு ஆதரவாக அவருடன் எப்பவும் உடன் இருப்போம் என்றும் கூறியுள்ளனர்.
Irular people support Suriya’s Jai Bhim issue