டபுள் கனெக்ஷன் ஆகும் இருமுகன்-ரெமோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் இருமுகன்.

ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.

இதன் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன், நிவின்பாலி, இயக்குனர் ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இணைந்த்து இல்லாமல் விக்ரம் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் அவர்களின் பட கேரக்டர்களில் இணைந்துள்ளனர்.

ரெமோ படத்தில் பெண் வேடமிட்டு நர்ஸ் வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

அதுபோல் இருமுகன் படத்திலும் விக்ரம் திருநங்கையாக நர்ஸ் வேடத்தில் வருகிறார்.

தீபாவளியை அதிரவிட போகும் கபாலி பட்டாசுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குழந்தைகள் ருசிக்கும் சாக்லேட் முதல் பெரியவர்கள் விரும்பும் வெள்ளி நாணயம் வரை ரஜினி நடித்த கபாலியின் புரோமோஷன் கொடி கட்டி பறந்தது.

சரி. படமும் ரிலீஸ் ஆகி 10 நாட்களை கடந்து விட்டது, இனிமே இதுபற்றிய பரபரப்பு அடங்கி விடும் என சிலர் நினைத்திருக்கலாம்.

ஆனால் அடங்குற ஆளா இந்த கபாலி என பட்டாசு போல வெடிக்க காத்திருக்கிறாராம்.

இந்த வருட தீபாவளிக்கு கபாலி பெயரில் பட்டாசுகள் தயாராகி வருகிறதாம்.

பட்டாசுகளுக்கு ‘நெருப்புடா’ என்றும் மத்தாப்புகளுக்கு ‘மகிழ்ச்சி’ என்றும் பெயர் வைத்து தயாராகிக் கொண்டிருக்கிறது.

நிஜமாலுமே கபாலியை எவரும் கட்டுப்படுத்த முடியாது என்பது உண்மைதான் போல.

ரஞ்சித்-அட்லி… இருவருக்கும் ஓகே சொன்ன விஜய்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கும் படத்தில் இருவேடங்களில் நடித்து வருகிறார் விஜய்.

வழக்கமாக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தன் அடுத்த படத்தையும் முடிவு செய்பவர் விஜய்.

தற்போது தன் அடுத்த இரு படங்களையும் முடிவு செய்து இருக்கிறாராம்.

இதில் விஜய் 61 படத்தை அட்லி இயக்க சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம்.

இதனையடுத்து விஜய் 62 படத்தை கபாலி இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கவிருக்கிறார்.

இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுந்தர்.சி படத்தில் விஜய் நடிக்க மறுக்க காரணம் இதுதானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ள படம் சங்கமித்ரா.

ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்ட உள்ளதாக கூறப்படும் இப்படத்தை சுந்தர் சி, இயக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 3 மொழிகளில் இப்படம் தயாராகிறது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய் நடிக்கவேண்டும் என்று சுந்தர்.சி விருப்பம் தெரிவித்திருந்தாராம்.

ஆனால் பெரிய பட்ஜெட் என்பதால் எட்டு மாதம் கால்ஷீட் கொடுக்க வேண்டியிருப்பதால் விஜய் நடிக்க மறுத்து விட்டாராம்.

எனவே வேறு ஒரு முன்னணி நடிகருக்கு வலை வீசி வருகிறார் சுந்தர் சி.

அஜித்துக்கு வில்லனாக மாறிய பாபி சிம்ஹா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேரம் மற்றும் ஜிகர்தண்டா படங்களில் வில்லனாக மிரட்டியவர் பாபி சிம்ஹா.

தனி ஹீரோவாக ஆனபோதிலும் அண்மையில் வெளியான மெட்ரோ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.

இந்நிலையில் அஜித்தின் ஏகே 57 படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

அஜித்துக்கு வில்லனாக விஜய்சேதுபதி, அர்ஜூன், அரவிந்த்சாமி, பிரசன்னா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில் தற்போது பாபி சிம்ஹா தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவா இயக்கும் இப்படத்தில் ‘லொள்ளு சபா’ சுவாமிநாதனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

சிம்புவின் ‘மதுரை மைக்கேல்’ படம் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ (AAA) படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இப்படத்தில் மூன்று வேடம் ஏற்கவுள்ளதால் தன் உடல் அமைப்பில் வித்தியாசம் காட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதில் ஒரு நாயகியாக ஸ்ரேயா நடித்து வருகிறார். மற்ற நாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டராக கருதப்படும் மதுரை மைக்கேலின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இதில் சிம்பு அசத்தலாக புகை பிடிப்பது போன்று டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் தரை மாஸ் ஆக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

More Articles
Follows