தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யாவுக்குள் ஒரு மகா நடிகன் ஒளிந்திருக்கிறார் என்பதை வெளி உலகக் அறியச் செய்தவர் இயக்குனர் பாலா.
இவர் இயக்கிய நந்தா மற்றும் பிதா மகனில் சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
இதனையடுத்து இவர்கள் இருவரும் இணைந்த ‘வணங்கான்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
பல வருடங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி அமைந்ததால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தான் சில தினங்களுக்கு முன் சூர்யா இந்த படத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளார் என அறிக்கை வெளியிட்டிருந்தார் பாலா.
இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும் அப்செட் ஆகினர். ஆனாலும் ‘வணங்கான்’ படப் பணிகள் தொடரும் என அறிவித்திருந்தார் பாலா.
னவே வணங்கான் படத்தில் யார் நாயகனாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் அதர்வா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்தில் அதர்வா அற்புதமான நடிப்பை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோல விக்ரம் ஆர்யா விஷால் சூர்யா வரலட்சுமி ஆர் கே சுரேஷ் ஜிவி. பிரகாஷ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் நல்லதொரு நடிப்பு பரிமாணத்தை காட்டியவர் பாலா என்பது இங்கே கவனிக்கத்தக்கது.