தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கிடையே விரைவில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவுள்ளார்.
2021 ஜனவரி கட்சி தொடங்கவுள்ளதாகவும் 2020 டிசம்பர் 31ஆம் தேதி கட்சி அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அண்மையில் அறிவித்தார்.
சாதியற்ற வெளிப்படையான ஊழலற்ற ஆட்சி மக்கள் பேரன்பில் அமையும். அற்புதம் அதிசயம் நடக்கும் என அறிவித்தார்.
மேலும் மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்… இப்போ இல்லேன்னா எப்பவுமே இல்ல அவரது ஸ்டைல் பாணியில் தெரிவித்தார் ரஜினிகாந்த்.
டிசம்பர் 12ஆம் தேதி அவரின் பிறந்தநாள் கேட் கில் கூட NOW OR NEVER என்ற வாசகத்தை வைத்தே அந்த கேக்கை வெட்டினார்.
நேற்று டிசம்பர் 14 முதல் அண்ணாத்த பட சூட்டிங்கில் கலந்துக் கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் தனது கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
அதில் ரஜினி கட்சிக்கு மக்கள் சேவை கட்சி என்ற பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் ரஜினிகாந்த் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது உறுதியான தகவல்தானா? என ரஜினி அறிவித்த பிறகே தெரியும். அதுவரை அமைதியாக இருக்கவும் என அவரது நெருங்கிய நண்பர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Is this the name and symbol of Rajinikanth’s political party?