தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் முதன் முறையாக தயாரித்துள்ள படம் ’99 சாங்ஸ்’.
அவரே இந்த படத்தின் கதையையும் எழுதி உள்ளார்.
இதனை விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கி உள்ளார்.
ஏஹன் பட், எடிசி வர்க்கீஸ், டென்சின் தல்ஹா உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
இசையால் வாழ்க்கையை இழந்த குடும்பத்தில் இருந்து வரும் ஒரு இசை கலைஞனால் அந்த குடும்த்தில் என்ன மாற்றத்தை கொண்டு வரமுடிகிறது. அவனின் இசை பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பது மாதிரியான கதை.
நேற்று இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த வெளியீட்டு விழாவில்… இயக்குனர்கள் ஷங்கர், கே.எஸ்.ரவிகுமார், இசை அமைப்பாளர்கள் அனிருத், யுவன்சங்கர் ராஜா, நடிகர் சிவகார்த்திகேயன், ஜிவி பிரகாஷ், பாடல் ஆசிரியர்கள் விவேக், மதன் கார்க்கி, பாடகர்கள் சித் ஸ்ரீராம், பென்னி தயாள், ஷர்த்க் கல்யாணி, சேஷா த்ரிப்பாதி, அர்ஜித் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது…
சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமானேன். மும்பைக்கு சென்றேன். அங்கே வெற்றி பெற்றேன்.
பின்னர் அமெரிக்கா போனேன். “உங்களிடம் கதை இருக்கா? என அங்கு கேட்டார்கள்.
அப்போதான் நான் கதை எழுத யோசித்தேன்.
மற்றவர்கள் எப்படி கதை எழுதுகிறார்கள்? என்பதை கவனித்து நான் எழுதிய கதை தான் 99 சாங்ஸ்.
இந்த பட கதையை என் சொந்த கதை என்கிறார்கள். நிச்சயமாக இல்லை, நான் எழுதிய கதை.
எல்லோர் வீட்டிலும் நடக்கிற கதைதான். ஒரு அம்மா தன் பிள்ளையை உயரத்துக்கு கொண்டு போகிற கதை தான்.
மூன்று நான்கு வருடங்களாக இந்த கதை எழுதினேன்.
இதில் நடிப்பதற்கு 750 பேர் வரை ஆடிசன் நடத்தினேன். அதன் பின்னரே தேர்வு செய்தேன்.
இதில் நடித்துள்ள ஏஹன் பட்டை ஒரு வருடம் இசை கற்க வைத்தேன். அதன்பிறகே சினிமாவில் நடிக்க வைத்தோம். என பேசினார் ஏஆர்ஆர்.
இப்பட டீசர் வெளியானதும் அதை கண்ட ரசிகர்கள் இது ஏ.ஆர்.ரஹ்மானின் சொந்த கதை என பதிவிட்டனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
Isai Puyal AR Rahman’s speech at 99 songs audio launch