மம்முட்டியுடன் இணைய மாட்டோமா.? ஐஸ்வர்யாவின் கனவை நிறைவேற்றிய ‘பஸூகா’

மம்முட்டியுடன் இணைய மாட்டோமா.? ஐஸ்வர்யாவின் கனவை நிறைவேற்றிய ‘பஸூகா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மாதம் ரிலீஸான தெலுங்கு மற்றும் பான் இந்தியா படமான ‘ஸ்பை’ சூப்பர் ஹிட் அடித்த வகையில் ஆந்திராவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகியிருக்கும் ஐஸ்வர்யா மேனன், கார்த்திகேயா, ‘ஸ்பை’ நாயகன் நிகில் சித்தார்த்தா உட்பட தெலுங்கின் முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்து பிசியாக வலம் வருகிறார்.

இந்நிலையில் மாபெரும் ஜாக்பாட்டாக மம்முட்டி படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவரது காம்பினேஷனில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன்.

இதுகுறித்துப் பேசிய அவர்…

“நான் மம்முட்டியின் தீவிர ரசிகை. அவர் படத்தில் ஒரே ஒரு காட்சியிலாவது நடித்துவிட மாட்டோமா என்று கனவு கண்டு காத்திருந்திருக்கிறேன்.

தற்போது அந்தக் கனவு ‘பஸூகா’ படத்தின் மூலம் நனவாகி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவருடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறேன்.

இப்படத்தின் இளம் நாயகனுக்கு ஜோடியாக மிக முக்கியமான, கதைக்கு திருப்பம் தரும் ஒரு கேரக்டரில் நடிக்கிறேன்.

அறிமுக இயக்குநர் டீனோ டென்னிஸ் இயக்கும் இப்படத்தை தியேட்டர் ஆஃப் ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மம்முட்டி எத்தனை தேசிய விருதுகள், கேரள அரசின் மாநில விருதுகள் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் மனதை வென்ற மனிதர்… ஆனால் படப்பிடிப்பில் மிக எளிமையாக பாசமாக, அவர் பழகும் விதம் நெகிழச் செய்கிறது.

அவருடன் இணைந்து நடிப்பது வாழ்வின் மறக்க முடியாத அம்சமாக மாறியிருக்கிறது. இப்படம் கமிட் ஆன பிறகு வரிசையாக அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்ந்து அழைப்பு வருகிறது” என்று உற்சாகமாகப் பேசுகிறார் ஐஸ்வர்யா மேனன்.

மம்முட்டி

Ishwarya Menon join hands with Mammootty

ரஜினி – மோகன்லால் – சிவராஜ்குமார் இணைந்த ‘ஜெயிலர்’ படத்தின் சென்சார் அப்டேட்

ரஜினி – மோகன்லால் – சிவராஜ்குமார் இணைந்த ‘ஜெயிலர்’ படத்தின் சென்சார் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சமீபத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் மூன்றாவது பாடலான “ஜுஜுபி” என்ற பாடலை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், இப்படத்தின் தணிக்கை குழு அளித்த சான்று குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘ஜெயிலர்’ படத்திற்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்று அளித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

ஜெயிலர்

Rajini’s ‘Jailer’ movie gets U/A certificate by Censor Board

தனுஷ் பிறந்தநாளில் டீசருடன் ரிலீஸ் தேதியை அறிவித்தது ‘கேப்டன் மில்லர்’ டீம்

தனுஷ் பிறந்தநாளில் டீசருடன் ரிலீஸ் தேதியை அறிவித்தது ‘கேப்டன் மில்லர்’ டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்த டீசர் நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டீசர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜூன் 28) நள்ளிரவு 12.01 மணிக்குவெளியாகியது.

இந்த டீசர் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது

மேலும், ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

CAPTAIN MILLER -Teaser

Dhanush’s ‘Captain Miller’ movie Teaser Released

துல்கரின் ‘கிங் ஆஃப் கோதா’ பட ரிலீஸ் & சிங்கிள் புரோமோ அப்டேட்

துல்கரின் ‘கிங் ஆஃப் கோதா’ பட ரிலீஸ் & சிங்கிள் புரோமோ அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’.

இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, செம்பன் வினோத் ஜோஸ், பிரசன்னா, அனிகா சுரேந்தர், கோகுல் சுரேஷ், ஷம்மி திலகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ‘கிங் ஆஃப் கோதா’ டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது.

இப்படத்தின் முதல் பாடலான ‘கலாட்டாக்கார’ பாடல் இன்று (ஜூன் 28) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘கலாட்டாக்கார’ பாடலின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த புரோமோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கிங் ஆஃப் கோதா

Dulquer’s ‘King Of Kotha’ movie ‘Kalapakkaara’ Song Promo released

தியேட்டர்களை தெறிக்க விட்ட ‘போர் தொழில்’ பட ஓடிடி ரிலீஸ் தேதி இதோ..

தியேட்டர்களை தெறிக்க விட்ட ‘போர் தொழில்’ பட ஓடிடி ரிலீஸ் தேதி இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான படம் ‘போர் தொழில்’.

இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

‘போர் தொழில்’ படம் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது.

சில தினங்களுக்கு முன்பு ‘போர் தொழில்’ திரைப்படத்தின் வெற்றியை படக்குழு ரசிகர்கள் முன் கேக் வெட்டி கொண்டாடினர்.

‘போர் தொழில்’ திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘போர் தொழில்’ படம் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ‘போர் தொழில்’ படம் கடந்த ஜூலை 7-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருந்தது. இப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் குவித்து வருவதால் ஓடிடி ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Ashok Selvan and Sarathkumar’s ‘Por Thozhil’ to premiere on OTT

நடிக்க ஆசை இருக்கா.? திறமை இருந்தும் வாய்ப்பில்லையா.? இதோ சூப்பர் சான்ஸ்

நடிக்க ஆசை இருக்கா.? திறமை இருந்தும் வாய்ப்பில்லையா.? இதோ சூப்பர் சான்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவி நிகழ்ச்சிகள் எப்போதும் தனித்துவம் வாய்ந்தவை. வித்தியாசமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறது விஜய் டிவி.

இதில் பங்கு பெரும் திறமையான கலைஞர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்து அவர்களும் சினிமாவில் ஜெயித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சின்னத்திரைக்கு ‘கதாநாயகி’யை தேடும் நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறது விஜய் டிவி

இந்த ரியாலிட்டி ஷோ ஜூலை 29 முதல் சனி மற்றும் ஞாயிறு தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியை கலக்கப்போவது யாரு பாலா மற்றும் குரேஷி தொகுத்து வழங்கவுள்ளனர்.

இந்நிகழ்ச்சி நடுவர்களாக இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், நடிகை ராதிகா சரத்குமார் இணைந்துள்ளனர்.

தற்போது இது தொடர்பான ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

Vijay TV new reality show titled Kadhanayagi

More Articles
Follows