தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சமந்தா – தேவ் மோகன் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘சாகுந்தலம்’.
இதில் அதிதிபாலன், கவுதமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடிக்க மணிசர்மா இசையமைத்து இருந்தார்.
குணசேகர் இயக்கி தயாரித்திருந்த இந்தப் படத்தை அவருடன் சேர்ந்து பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவும் தயாரித்திருந்தார்.
கிட்டத்தட்ட ரூ.58 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரிலீசாகி பெரும் தோல்வி அடைந்தது.
ரூ.12 கோடியை மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் படத் தயாரிப்பாளர் தில் ராஜு அளித்த சமீபத்திய பேட்டியில்…
“நான் ‘சாகுந்தலம்’ படத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். ரசிகர்களுக்கு படம் பிடித்தால் சூப்பர் ஹிட்.. படம் பிடிக்காவிட்டால் பெரும் தோல்வி என நினைத்தேன். எங்கே தவறு என தெரியல.
எனக்கு 2017-ம் ஆண்டு சிறப்பாக அமைந்தது. நான் தயாரித்த அந்த வருட படங்கள் லாபத்தை கொடுத்தன.
என் 50 படங்களில் சில படங்கள் எனக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளன. அப்படிப் பார்க்கும்போது என் 25 ஆண்டு சினிமா பயணத்தில் ‘சாகுந்தலம்’ பெரும் தோல்வி.” எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் – ராஷ்மிகா இணைந்து நடித்த ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு என்பது குறிப்பிடத்தக்கது.
It was a big failure in my 25 years of cinema.; ‘Varisu’ Producer Dilraju Open Talk