தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் உலக அளவில் பெரும் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. ரஜினிகாந்த் தற்போது இமயமலையில் ஆன்மீகம் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜெயிலர் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்வில் நடிகர் சுனில் பேசும்போது..
“வாழ்நாளில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பாக இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக தலைவருக்கும் இயக்குனர் நெல்சனுக்கும் சன் பிக்சர்ஸுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் என்னை ரொம்பவே அழகாக காட்டியதற்கு அவருக்கும் நன்றி” என்று கூறினார்.
நடிகை மிர்னா பேசும்போது…
“என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை அளித்த இயக்குனர் நெல்சனுக்கு நன்றி. இந்த படம் வெளியானதில் இருந்து மக்களிடம் எனக்கு மிகப்பெரிய அன்பு கிடைத்து வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பு படத்தொகுப்பாளர் நிர்மலிடம் பேசும்போது கூட, இந்த படம் வெளியான பிறகு உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்றார். அதுதான் இப்போது நடக்கிறது.
ஒரு ஆர்டிஸ்ட்டாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிப்பது அனைவருக்கும் கனவாக இருக்கும். எனக்கு அது கொஞ்சம் சீக்கிரமே நிறைவேறி விட்டது. அவருடன் 35 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன் லாலேட்டனுடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது.
நேற்று இந்த படத்தை கேரளாவில் பார்த்துவிட்டு தான் வருகிறேன். சுனில் சாருக்கு அங்கே அவ்வளவு வரவேற்பு இருக்கிறது. அவர் அங்கே சென்றால் தூக்கி கொண்டாடி விடுவார்கள். இந்த படத்தை கேரளாவில் பயங்கரமாக கொண்டாடி வருகிறார்கள். என் வாழ்க்கையில் ஜெயிலர் மிக முக்கியமான படம்” என்று கூறினார்.
Jailer got huge response at Kerala says Mirna