தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‛பொன்னியின் செல்வன்’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று செப்டம்பர் 6, 2022 மாலை 6 மணியளவில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கி நடந்து வருகிறது.
டிடி (திவ்யதர்ஷினி) மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களுடன் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன், இயக்குனர்கள் ஷங்கர் கௌதம் மேனன், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர், ராஹா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.
ரஜினியை கண்டதும் ஐஸ்வர்யா ராய் கட்டி பிடித்துக் கொண்டார். பின்னர் ரஜினி காலில் விழுந்து ஆசி பெற்றார்.
பார்த்திபன் மேடையேறி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் பேசினார்.
முஜே ஹிந்தி நஹி மாலும் ஹே.. தமிழே என் ஞானம் ஹே.. என்றார். மேலும் சுஹாசினிக்கு முன் மணிரத்னத்தின் காதலி யார் தெரியுமா? அது பொன்னியின் செல்வன் தான்.
அந்த நாவலை லவ் செஞ்சா தான் இப்படி படமெடுக்க முடியும்.” என பேசினார் பார்த்திபன்.
பின்னர் நடிகர் ஜெயராம் மேடையேறி படப்பிடிப்பில் நடந்த சம்பவங்களை அவரவர் குரல்களில் பேசி காட்டினார்.
முக்கியமாக சாப்பாட்டுக்காக பிரபு ஏங்கியதும்… அடுத்த சீன்காக கார்த்தி காத்துருந்ததும் பற்றி பேசினார்.
அரங்கமே சிரிப்பலையில் குலுங்கியது. ரஜினி கமல் மணிரத்னம் த்ரிஷா கார்த்தி ஷங்கர் உள்ளிட்டோர் வாய்விட்டு சிரித்தனர்.
Jayaram and Parthiban sema funny speech at PS1 event
Kamal Shankar Rajini at PS1 Audio Launch
Rajinikanth entry Ponniyin Selvan 1 Audio Launch live updates