தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யாவின் ‘2D ENTERTAINEMT’ நிறுவனம் தயாரிக்க, ஜோதிகா நடிக்கும் புதிய பட பூஜை சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சூர்யா கலந்துகொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
வழக்கம்போல இந்த படமும் கதாநாயகியை மையப்படுத்திய கதை தான்.
இப்படத்தை ’குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்குகிறார்.
காமெடி படமாக உருவாகும் இந்த படத்தில் ஜோதிகாவுடன் ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூரலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்ய விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.
கலை இயக்கத்தை வீரசமர் கவனிக்க, படத்தொகுப்பை விஜய் கவனிக்கிறார்.
இவையில்லாமல் அறிமுக இயக்குனர் ராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா.
இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.