தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் டீசர், பாடல்கள் பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது.
எனவே கோடானு கோடி ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
ஜுலை 1ஆம் தேதி இப்படத்தை சென்சாருக்கு அனுப்பவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், புகழ் பெற்ற பிரான்ஸ் நாட்டில் உள்ள ‛ரெக்ஸ் சினிமாஸ் திரையரங்கில் ‛கபாலி படம் திரையிடப்பட உள்ளதாம்.
இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு படம் அங்கு திரையிடப்படுவது இதுவே முதன்முறையாகும்.
ஜுலை மாதம் 14ஆம் தேதியன்று படத்தின் பிரிமீயர் காட்சி அங்கு நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதில் கலந்துகொள்ள ரஜினிக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
எனவே இந்த காட்சியில் ரஜினி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்குள் ஒருமுறை இந்தியா வந்து செல்வாரா?. அல்லது அமெரிக்காவில் இருந்து அப்படியே அங்கு செல்வாரா ரஜினி? என்பது குறித்த தகவல்கள் இல்லை.