தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், காஜல் அகர்வால் மற்றும் மெஹ்ரின் பிர்ஸாடா நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்கு படம் `கவச்சம்’.
இப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.
இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் பெலம்கொண்டா ஸ்ரீனிவாஸ், மெஹ்ரின் பிர்ஸாடா, காஜல் அகர்வால், இயக்குனர் ஸ்ரீனிவாச மமிலா, இசை இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தாமான், ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
எனவே பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்து பேசிக் கொண்டு இருந்தனர்.
காஜல் அகர்வால் மேடையில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு பற்றியும் அவர் பேசினார்.
அப்போது சோட்டா நாயுடு, காஜல் அகர்வாலை அணைத்து முத்தமொன்று கொடுத்தார்
இதனையடுத்து காஜல் அகர்வால் செய்வது அறியாது ஒருவழியாக சமாளித்தார்.
இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் காஜல் ரசிகர்கள் #BanChotaKNaidu என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ஒளிப்பதிவாளரை விமர்சித்து வருகின்றனர்.