தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அவரது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனால் நேற்று சமூக வலைத்தளங்கள் முழுவதும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா, தலைவா அரசியலுக்கு வா, என்றே பல வார்த்தைகள், டிசைன்கள் காணப்பட்டன.
இந்நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரான கமல் நேற்று இரவு 9 மணிக்கு மேல் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…
” Kamal HaasanVerified account @ikamalhaasan
சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். விஸ்வரூபம் 2 வேலையாக. அமேரிக்காவில் உள்ளேன். இங்கு இப்போதுதான் சில மணிகள் முன் பிறந்தது 12 ஆம் தேதி. வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள். கமல்” என்று பதிவிட்டுள்ளார்.