தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன் பிறந்த நாளன்று, ∴பாண்டிக்கோ என்ற கம்பெனி துவக்கும் மெய்நிகர் ஆன்லைன் உலகில் (மெட்டாவெர்ஸில்) இணையதள அவதாரமாகும் முதல் இந்திய நடிகராகிறார் பத்மஸ்ரீ. கமல்ஹாசன் அவர்கள்.
இந்த புதிய முயற்சியில், கமல் ஹாசன் முதன் முறையாக, லோட்டஸ் மீடியா என்டர்டைன்மெண்ட் கம்பெனி மூலம் ∴பாண்டிக்கோவுடன் இணைந்து தன் டிஜிட்டல் அவதாரங்களையும், NFT (Non fungible Token) சொத்துக்களையும் மெய்நிகர் ஆன்லைன் உலகில் (மெட்டாவெர்ஸில்) பிரத்யேகமாக வெளியிடுகின்றார். இவை www.kamal.fantico.in எனும் இணைய தளத்தில் துவங்கப்படும்.
∴பாண்டிக்கோ கம்பெனி துவக்கும் ஒரு கேம் சார்ந்த மெட்டாவெர்ஸில், கமல்ஹாசனுக்கென்று தனி உலகம் இருக்கும். இதில் உலகெங்கும் இருக்கும் அவர் ரசிகர்கள் அவருடனும் அவரின் டிஜிட்டல் அவதாரங்களுடனும் அளவளாவி, அதன் நினைவாக டிஜிட்டல் டோக்கன்கள் மற்றும் நினைவு சின்னங்களையும் வாங்கலாம்.
அவருடைய மெய்நிகர் உலகின் விவரங்கள் மற்றும் மெட்டாவெர்ஸின் ஆச்சர்யங்கள் வெளியில் அறிவிக்கப்படாமல் இருந்தாலும், கம்பெனியின் டிஜிட்டல் மேடையில் முதலில் அவர் ரசிகர்களுக்காக பிரத்தேயேக NFTகள் அறிமுகப்படுத்தப்படும். தொடர்ந்து அவரின் மெய் நிகர் உலகின் ஆச்சர்யங்கள் துவங்கப்படும் என்பதே எதிர்பார்ப்பு.
தன் படங்களில் கமல்ஹாசன் அவர்கள் புதுமையை புகுத்துவதில் ஒரு முன்னோடியாக திகழ்ந்தவர் மட்டுமன்றி, என்றுமே பொழுபோக்கு உலகின் புதிய டெக்னாலஜி பயன் படுத்த முன்னிருப்பார். அதையே எதிர்கால டிஜிட்டல் உலகிலும் முன்னெடுக்கிறார் என்பது ஆச்சரியத்திற்குரியதில்லை: எதிர்பார்ப்பதுதான்…
“உருவாகி கொண்டிருக்கும் மெய்நிகர் உலகின் சாத்தியக்கூறுகள் எனக்கு உத்வேகம் தருபவை. மெட்டாவேர்ஸ் இன்று பாப்புலர் ஆகிக்கொண்டிருக்கிறது. என் அறுபது வருட வாழ்க்கை பயணத்தின் பிரதிபிம்பமாக என் டிஜிட்டல் உலகம் இருக்கும்” என்று திரு.கமல்ஹாசன் அவர்கள் கூறினார்.
தொடர்ந்து, ∴பாண்டிக்கோ கம்பெனியின் முதன்மை அதிகாரி திரு.அபயானந் சிங் பேசும் போது “எங்களுக்கு இந்த கேம் சார்ந்த மெட்டாவெர்ஸ் துவங்குவதில் மிக்க மகிழ்ச்சி. அதுவும், கமல்ஹாசன் போன்ற Iconனுடன் இணைந்து, இந்தியாவில் முதல் முறையாக இது போன்ற முன்னெடுப்பை எங்கள் டிஜிட்டல் மேடையில் துவக்குவது ரசிகர்களுடனான அமர்வுக்கு ஒரு புதுமையான முன் மாதிரியாக அமையும்” என்றார்.
Kamal Haassan to launch virtual avatar on metaverse by Fantico