தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தமிழ், மலையாளம், தெலுங்கு & ஹிந்தி ஆகிய மொழி படங்களில் திறமையாக நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திருப்பவர் கீர்த்தி சுரேஷ்.
மகாநடி படத்திற்காக தேசிய விருதையும் வென்றிருக்கிறார் கீர்த்தி.
தற்போது ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் தொழில் அதிபருடன் கீர்த்திக்கு திருமணம் நிச்சயமாகி விட்டதாக தகவல்கள் பரவியது.
(நம் தளத்தில் அப்படி ஒரு பொய் செய்தி வெளியாகவில்லை)
இந்த வதந்தி குறித்து கீர்த்தி கூறியதாவது…
“எங்கிருந்து இது போன்ற தகவல் வெளியாகிறது. வெளியானது என தெரியாது.
இப்போது திருமணம் செய்துகொள்ள நேரமும் இல்லை. அந்த எண்ணமும் இல்ரை.
என் சொந்த வாழ்க்கை பற்றி வதந்தி பரப்பாமல் ஏதாவது நல்ல விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.” என கூறியுள்ளார் கீர்த்தி.
Keerthy suresh reacts on wedding rumours