தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த டிவி சூட்டிங் கிட்டதட்ட 70 நாட்களுக்கு பிறகு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக சூட்டிங் ஸ்பாட் படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் சின்னத்திரை சங்கத்தின் செயலாளரான நடிகை குஷ்புவின் ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை உண்டாக்கியது என்பதை பார்த்தோம்.
அதில்.. “ப்ரஸ்காரர்கள் எங்கிருந்தாவது வந்துவிடுவார்கள். போட்டோ, வீடியோ எடுத்துக் கிழிப்பதற்கு என்று எங்கியிருந்தாவது வருவான். உட்கார்ந்து கொண்டிருப்பான்.
கோவிட் (கொரோனா) தவிர்த்து ப்ரஸ்காரனுக்கு வேறு எந்தவொரு செய்தியுமே கிடையாது. நம்மைப் பற்றி ஏதாவது போடுவதற்குக் காத்துக் கொண்டிருப்பார்கள்.” இவ்வாறு ஒருமையில் மீடியாக்களை பற்றி பேசியிருந்தார் குஷ்பு.
இந்த ஆடியோ பத்திரிகையாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் குஷ்பூ கூறியிருப்பதாவது:
“நான் ஊடகங்களைப் பற்றிப் பேசியதாக ஒரு வாய்ஸ் மெசேஜ் சுற்றி வருகிறது. அது எடிட் செய்யப்பட்டது. அது எங்கள் தயாரிப்பாளர் குழுவிலிருந்து சென்றிருக்கிறது.
எங்களுக்கு மத்தியில் இப்படி மலிவாக யோசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்து வெட்கப்படுகிறேன்.
ஊடகங்களை அவமதிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் அப்படி பேசவில்லை. அது நண்பர்களிடம் நாம் பேசும் முறைதான்.
ஊடகங்கள் மீதான என் மதிப்பு அனைவருக்கும் தெரியும்… பத்திரிகையாளர்கள் (சிலர்) அதற்கு சாட்சி.
திரைத்துறையில் இந்த 34 வருடங்களில் ஒரு முறை கூட நான் அவர்களிடமோ, அவர்களைப் பற்றியோ நான் மரியாதைக் குறைவாகப் பேசுவதை அவர்கள் பார்த்திருக்கவோ, கேட்டிருக்கவோ மாட்டார்கள்.
அந்த வாய்ஸ் மெசேஜ் அரைகுறையாக உள்ளது. ஆனால் உங்களில் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
என தெரிவித்துள்ளார் குஷ்பூ.
மேலும்…. துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் யாருக்காக பணிபுரிகிறீர்களோ அவர்கள்தான் உங்களை முதுகில் குத்த முயல்கிறார்கள்.
எந்தத் தயாரிப்பாளர் இதைச் செய்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ஆனால், யாரென்று நான் சொல்ல மாட்டேன். எனது அமைதியும், மன்னிப்புமே அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை. செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளன.
இவ்வாறு குஷ்பூ பதிவிட்டுள்ளார்.
Khushboo apologizes for her Audio voice about Journalists