தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையில் தி. நகரில் மிக பிரம்மாண்டமான துணிக்கடை என்றால் சரவணா ஸ்டோர்ஸ் தான்.
இந்த கடையை போல் இந்த கடை விளம்பரங்களும் படு ஜோர். இதற்கு முக்கிய காரணம் இந்த நிறுவனர் அருள் சரவணன் தான்.
இவர் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
அஜித், விக்ரம் நடித்த உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி – ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இநத் படத்தை இயக்கி வருகின்றனர்.
சரவணனுக்கு ஜோடியாக கீர்த்திகா திவாரி நடிக்க 2வது நாயகியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார்.
புரொடக்ஷன் நம்பர் 1 என்ற தற்காலிக பெயரில் அருள் சரவணன் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இப்படத்தில் பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பெரும் பொருட் செலவில் தயாராகும் இப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ரூ.10 கோடி செலவு செய்துள்ளனர்.
பெரிய பிரமாண்ட செட்டுகள் அமைத்து பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர்.
ஒரு பாடலுக்கே பத்து லட்சம்னா இந்த படம் முடிவதற்குள் எத்தனை லட்சங்களை இறைக்க போகிறோரோ? என கோலிவுட்டே அருளை ஆச்சரியத்தில் பார்த்து வருகிறது.
இந்த பாடல் காட்சியில் சரவணன் அருள் கீர்த்திகா திவாரி நடனமாடியுள்ளனர். அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Legend Saravana Arul debut movie song shoot cost Rs 10 crores