தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படம் இன்னும் 9 தினங்களில் வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் ‘கைதி 2’ படத்தை இயக்குவார் எனக் கூறப்பட்டது.
ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ‘ரஜினி 171’ படத்தை இயக்க உள்ள லோகேஷ். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க அன்பறிவு சண்டை பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.
லியோ படத்தில் பணிபுரிந்த மனோஜ் பரஹம்ஸா என்பவர் தான் ‘தலைவர் 171’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
அதன்படி இந்த படத்தின் முக்கியமான காட்சிகளை ஐமேக்ஸ் கேமராவில் படமாக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படம் ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Lokesh plans for Imax Camera in Thalaivar 171 movie