தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க, மிஷ்கின், யோகி பாபு, சரிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
‘மாவீரன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது.
இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர்.
‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை இன்று மாலை 5 மணிக்கு படக்குழு வெளியிட்டது.
சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மேலும், இந்த அறிவிப்பை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
Maaveeran film tamilnadu release rights take udhayanidhi’s Red Giant