தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தை சுந்தர் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
‘சங்கமித்ரா’ என்ற பெயரிடப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், கலை இயக்குனராக சாபுசிரில், கிராபிக்ஸ் இயக்குனராக கமலக்கண்ணன், ஒளிப்பதிவாளராக சுதீப் சட்டர்ஜி ஆகியோரும் இணைந்துள்ளனர்.
இவர்களைத் தவிர்த்து, மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் வரை முடிவாகி விட்டாலும் இப்படத்திற்கு ஹீரோ சிக்காமல் இருந்தார்.
விஜய், சூர்யா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது.
ஆனால் ஹீரோவுக்கான தேடல் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் உள்ள இப்படத்தில் ஒரு ஹீரோவாக நடிக்க தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
மற்றொரு ஹீரோ யார்? அவரும் டோலிவுட் நாயகனா? அல்லது கோலிவுட் நாயகனா? என்பது விரைவில் தெரிய வரும்.