தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல் கட்சி மக்கள் நீதி மய்யம் படு தோல்வியை சந்தித்தது.
கமீலா நாசர் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
தேர்தல் தோல்விக்கு பின்னரும் கமல் அணுகுமுறையில் மாற்றமில்லை எனக்கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணை தலைவர் மகேந்திரன் விலகினார்.
தமிழகத்தை சீரமைப்பதற்கு முன்னர் அவர் தன் கட்சியை சீரமைக்க வேண்டும். அவர் விரும்பினால் நண்பராக தொடர்வேன்” என அறிக்கை விட்டு பிரஸ் மீட் வைத்து கட்சியில் இருந்து விலகினார்.
இவரை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.
(கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டதாகவும் கட்சியை சீரமைக்கும் அதிகாரம் கமலிடம் கட்சி வழங்கியுள்ளதாக அதன் துணைத் தலைவர் பொன்ராஜ் சமீபத்தில் கூறியிருந்தார்.)
இதன்பின்னர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு விலகுவதாக அறிவித்தார்.
“மக்கள் நீதி மய்யம் கட்சியில் தான் வகித்த பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன். என்றார்.
அதே நாளல் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மநீம வேட்பாளர் பத்ம பிரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
(மநீம கட்சியை புனரமைக்கும் வகையில், துணை தலைவர் பொன்ராஜ், பாண்டிச்சேரி துணைத் தலைவர் தங்கவேலு, பொதுச் செயலாளர்கள் சந்தோஷ்பாபு, சி.கே.குமரவேல், முருகானந்தம், மவுரியா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் உமாதேவி ஆகியோர் பதவி விலகலுக்கான கடிதத்தை அளித்து இருந்தனர்)
இந்த நிலையில், மநீம கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திருச்சி முருகானந்தமும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கட்சித் தலைவரான கமல்ஹாசன் மீது குற்றம் சாட்டி 6 பக்கம் கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த முருகானந்தம் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது…
“எந்த நிர்வாகிகளிடமும் கலந்தாலோசிக்காமல் பலவீனமான கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தார் கமல்.
நூறுக்கும் அதிகமான இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது தான் தோல்வி அடைய காரணம்.
கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் பல்வேறு கேள்விகளை நான் கமல்ஹாசனிடம் எழுப்பினேன் ஆனால் அவர் எதற்கும் பதில் சொல்லவில்லை.
கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை. சர்வாதிகாரம் தலை தூக்கி விட்டது.
நமது கட்சி என்பதை மறந்து, அது என்னுடைய கட்சி என கூற ஆரம்பித்து விட்டார் கமல்.
கமல் தன்னுடைய புகழுக்காக செயல்பட்டாரோ என்கிற சந்தேகம் இருக்கிறது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைமை சரியான தலைமை அல்ல, சரியான பாதையில் அந்த கட்சி வழி நடத்தப்படவில்லை.
தோல்வியை கமல் ஏற்றுக்கொள்ளாமல் எங்கள் மீது திருப்பி விட்டார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் நான் வகித்த பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன்.
என்னுடன் சேர்ந்து கட்சியில் இன்னும் சில நிர்வாகிகளும் விலகி விட்டனர்.
வரும் நாட்களில் மேலும் சிலர் விலகுவார்கள்” என்றார் முருகானந்தம்.
இவருடன் கட்சியின் மாநில செயலாளர் வீரசக்தி, மாநில துணை செயலாளர் அய்யனார், பி.ஏ. விஸ்வநாத், மாவட்ட பொருளாளர் சுவாமிநாதன் உள்பட 15 பேர் தங்களுடைய உறுப்பினர் & பொறுப்புகளில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் முருகானந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களுடன் சேர்ந்து திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 414 வாக்குச் சாவடிகளில் நியமிக்கப்பட்ட கிளை செயலாளர்களில் சுமார் 200 பேர், 2000 கிளை செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 2,200 பேரும் உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக முருகானந்தம் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Makkal Needhi Maiam General Secretary Muruganandam quits the party… He says there is dictatorship in the MNM party.