தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2023 ஆகஸ்ட் 10ஆம் தேதி..: ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதே நாளில் இதே ஜெயிலர் என்ற பெயரில் ஒரு மலையாள படமும் ரிலீஸ் ஆகிறது.
அதுமட்டுமில்லாமல் நாளை ஜூலை 28ஆம் தேதி இரண்டு ‘ஜெயிலர்’ படத்தின் பாடல்களும் ஒரே நாளில் வெளியாகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் ஜெயிலர் பட கதை:
ரஜினி ஜெயிலராக பணிபுரியும் சிறைச்சாலையில் மிகப்பெரிய குற்றவாளியை திருட்டுத்தனமாக வெளியே எடுக்க ஒரு கும்பல் அலைகிறது.. ரஜினிக்கும் அந்த கும்பலுக்கும் நடக்கும் மோதல் தான் ‘ஜெயிலர்’ படத்தின் கதை எனக் கூறப்படுகிறது.
மலையாள ‘ஜெயிலர்’ படத்தின் கதை :
1957ல் நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு ‘ஜெயிலர்’ உருவாக்கப்பட்டுள்ளது. 5-6 கிரிமினல்கள் ஒரு ஜெயிலரை கொல்ல திட்டம் போடுகிறார்கள். இதில் தியான் சீனிவாசன் ஜெயிலராக நடிக்க சக்கிர் மடத்தில் என்பவர் இயக்கியிருக்கிறார்.
இந்த நிலையில் சக்கிர் மடத்தில் என்பவர் இந்த இரு ‘ஜெயிலர்’ பட தலைப்பு குறித்து பேசி இருக்கிறார்.
“நாங்கள் 2021 ஆம் ஆண்டிலேயே ‘ஜெயிலர்’ படத்தின் தலைப்பை கேரளாவில் பதிவு செய்து விட்டோம். ஆனால் 2022 ஆம் ஆண்டுதான் ரஜினியின் ‘ஜெயிலர்’ பட தலைப்பு வெளியானது.
அதன் பின்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
சன் பிக்சர்ஸுக்கும் ரஜினி அண்ணாவுக்கும் தென்னிந்தியத் திரைப்படச் சங்கத்திற்கும் சேர்த்து கடிதம் எழுதினேன்.
நாங்கள் ‘ஜெயிலர்’ பட டைட்டிலை மாற்ற சொல்லவில்லை. ஆனால் கேரளாவில் மட்டுமாவது மாற்ற வேண்டும் என்று தான் கோரிக்கை வைக்கிறோம்.
இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கு ரூ. 5 கோடி செலவானது. எனது வீட்டையும் மகள்களின் நகைகளையும் அடைமானம் வைத்துள்ளேன். காரை விற்றுவிட்டேன். வெளியிலும் கடன் வாங்கியுள்ளேன். வட்டிக் கட்டவே சிரமமாக உள்ளது.
எனது எதிர்காலமே ‘ஜெயிலர்’ படத்தில்தான் அடங்கியிருக்கிறது. சில நேரங்களில் தற்கொலை செய்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் வருகிறது.
ரஜினி அண்ணாவுக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். எங்கள் படம் கேரளாவில் மட்டும்தான் வெளியாகிறது..
ரஜினி அண்ணாவுடன் மோகன்லால் சேட்டனும் இணைந்து நடித்திருக்கிறார்கள். எனவே மலையாள ரசிகர்கள் முதலில் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திற்கு தான் முன்னுரிமை கொடுத்துப் பார்ப்பார்கள்.
ரஜினி அண்ணா தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொள்பவர். எனவே என் கஷ்டத்தை புரிந்து கொள்வார் என நினைக்கிறேன்.” என்ன தெரிவித்திருக்கிறார் ஜெயிலர் இயக்குனர் சக்கிர் மடத்தில்.
இது தொடர்பான வழக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Malayalam Jailer in trouble will Rajini take action