தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சுசீந்திரன் தயாரிப்பில் மனோஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மார்கழி திங்கள்’.
இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் முதன்மை நாயகனாக பாரதிராஜா நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரைய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் பேசியதாவது…
இனிய மாலை வணக்கம். ‘மார்கழி திங்கள்’ டைட்டில் ரொம்ப அற்புதமாக இருக்கிறது. இப்படத்தில் நிறைய விஷயம் இருக்கும் என்று நம்புகிறேன்.
‘அலைகள் ஓய்வதில்லை’ மாதிரி இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சுசீந்திரன் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். நல்ல படமாக அமைய வாழ்த்துகள்.
இயக்குநர் திரு பேசியதாவது…
மனோஜ் மற்றும் சுசீந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்த படம் கண்டிப்பாக நல்ல படமாக அமையும் எனவும் வாழ்த்துகிறேன்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது…
மனோஜ் கட்டாயம் இயக்குநராக ஆவார் என்று நம்பினேன், அது தற்போது உண்மையாகி உள்ளது. சுசீந்திரன் மூலம் இது நடந்துள்ளது. பாரதிராஜா அவர்கள் இயக்குநராக இருந்து இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். மனோஜின் திறமை மீது எனக்கு மிகவும் நம்பிக்கை உள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன்.
தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன் பேசியதாவது…
வாழ்த்த வந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, பாரதிராஜாவிற்காக தான் அனைவரும் வந்திருக்கிறோம். சுசீந்திரன் சார் முதல் படம் தயாரித்திருக்கிறார். மனோஜ் நிறைய படங்கள் இயக்கி வெற்றி பெறுவார் என்று வாழ்த்துகிறேன்.
Margazhi Thingal will be like Alaigal Oivadhillai says Dhananjayan