தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தில் மட்டுமல்ல கேரளா மற்றும் ஆந்திராவிலும் விஜய்க்கு ரசிகர் பட்டாளம் உள்ளது.
விஜய்யின் படங்கள் குறித்து அறிவிப்போ அல்லது புகைப்படங்கள் ஏதாவது வெளியானால் அதை இணையங்களை தேடுவதை இவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
சென்ற ஆண்டு வெளியான மெர்சல் படம் மிகவும் பரபரப்பாக பேசப்பட இவர்களது பணியும் முக்கிய காரணமாகும்.
இந்நிலையில் பிரபலமான விக்கீபீடியா இணையதளம் சென்ற வருடத்தின் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதில் தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்கப்பட்ட பக்கங்களில் மெர்சல் படம் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதாவது கிட்டதட்ட 25 லட்சம் பார்வைகளுக்கு மேல் பெற்றுள்ளதாம்.
இதற்கு அடுத்து 20.9 லட்சம் ஹிட்ஸ் பெற்று விவேகம் 2ஆம் இடத்தை பெற்றுள்ளதாம்.
இதனையடுத்து உள்ள இடங்களில் பைரவா, விக்ரம் வேதா மற்றும் சிங்கம் 3 ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Mersal got 1st place in Wikipedia and Vivegam in 2nd place