தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் அட்லி இயக்கியுள்ள படம் மெர்சல்.
இப்படம் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகவ்வுள்ளது.
த்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இதனிடையில் சென்னை உயர்நீதிமன்றம் ‘மெர்சல்’ படத்தை விளம்பரம் செய்ய இடைக்கால தடை விதித்தது.
2014ம் ஆண்டு தயாரிப்பாளர் ராஜேந்திரன் ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை படத்திற்கு வைத்திருக்கிறார்.
இந்த தலைப்பை விஜய் படத்திற்கும் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும் இத்தலைப்புக்கு டிரெட் மார்க் பெற்றுள்ளதால், மெர்சலாயிட்டேன் படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், அக்டோபர் 3ம் தேதி வரை மெர்சல் தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.
தற்போது விசாரணை முடிந்துள்ள நிலையில், வழக்கின் தீர்ப்பை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்துள்ளது ஐகோர்ட்.
மேலும் ‘மெர்சல்’ பட பெயரை பயன்படுத்த, விளம்பரப்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
Mersal title issue court will give Judgment on 6th Oct 2017