தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று காலை தமிழக காவல்துறை டிஜிபியை சந்தித்தார் நடிகரும் திருவாடனை எம்எல்ஏவுமான கருணாஸ்.
அப்போது தேசிய தெய்வீக யாத்திரை என்ற பெயரில் சென்னை நந்தனம் தேவர் சிலை தொடங்கி பசும்பொன் வரை நடைப்பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி மனு அளித்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசியதாவது… “மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும்.
1994-ம் ஆண்டு தேவர் சிலையை நந்தனத்தில் திறந்து வைத்தார் ஜெயலலிதா. அப்போது கள்ளர், மறவர், அகமுடையோரை தேவர் இனம் என அறிவித்தார்.
அந்த அரசாணையை உடனடியாக நடைமுறைபடுத்தனும்.
தற்போது திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் வீணாகபோய் விடக்கூடாது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.
கொரோனாவை வெல்வோம், கொல்வோம் என தொற்று வியாதியிடம் என்ன வசனங்கள் தேவை உள்ளது?
நடிகர் சிம்பு அது போல் பேசியது தவறு.. தொற்று நோயை வெல்வோம் கொல்வோம் என்றால் எப்படி?
அவருக்கு கொரோனா வந்தால் தான் தெரியும். நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வந்துள்ளேன்” என பேசினார் கருணாஸ்.
MLA Karunaas reply to Silambarasan TR