தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
1990களில் டிவியில் ஒளிப்பரப்பான பிரபல தொடர்கள் மர்ம தேசம் & ஜீ பூம்பா. இதில் குட்டி ராசுவாக நடித்து இருந்தார்.
இவை இரண்டிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் லோகேஷ். மர்ம தேசம் தொடரை விடவும் ‘ஜீ பூம்பா’ சீரியல் மாஸ்டர் லோகேஷூக்கு புகழை கொடுத்தது.
பல ஆண்டுகளுக்கு பின்னர் தனியார் சேனல்களான சன் டிவி மற்றும் ராஜ் டிவி சேனல்களில் இந்த் தொடர்கள் ஒளிபரப்பானது.
‘மர்மதேசம்’ இயக்குனர் நாகா சொன்ன ஆலோசனையால் டைரக்ஷன், எடிட்டிங் என பலவற்றை கற்றுத் தேர்ந்து சினிமாவுக்குள் நுழைய ரெடியாகி வந்தார் லோகேஷ்.
இவர் இயக்கிய சில குறும்படங்கள் இணைய தளங்களில் வெளியாகி பாராட்டுக்களைப் பெற்றன.
இந்நிலையில் லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை கொண்டார். இது டிவி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் மறைந்த பிரபல நடிகர் எம் ஆர் ராதாவுக்கு ஒருவகையில் பேரன் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.