தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நயன்தாரா நடித்து வந்தாலும் அவ்வப்போது டாப் ஹீரோஸ் படங்களிலும் தலை காட்டி வருகிறார்.
இதற்காக ரூ. 3 கோடி முதல் 4 கோடி வரை சம்பளமும் பெற்று வருகிறார்.
அண்மையில் ரஜினியின் தர்பார், விஜய்யின் பிகில், அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
இதில் விஸ்வாசம் படத்தில் மட்டும்தான் நயன்தாராவுக்கு பெயர் கிடைத்துள்ளது. சிறப்பான நடிப்பை கொடுத்துத்திருந்தார்.
இறுதி கட்ட படப்பிடிப்பில் நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன்” !
ஆனால் தர்பார் மற்றும் பிகில் படங்களில் நயன்தாராவுக்கு பெயர் கிடைக்கவில்லை. அவருக்கான காட்சிகளும் குறைவு.
விமர்சனங்களிலும் நயன்தாரா பெயர் பெரிதாக இடம் பெறவில்லை.
இதனால் நயன்தாராவும் அவரது ரசிகர்களும் கடும் அப்செட்டில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.