தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா.
இவரே தயாரித்து நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ஏற்கனவே 2 முறை (சிம்பு மற்றும் பிரபுதேவா) லவ் ப்ரேக் அப் ஆனவர் நயன்.
தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கடந்த 6 வருடங்களாக காதலில் உள்ளார்.
விரைவில் இவர்கள் திருமணம் செய்துக் கொள்வார்கள் எனத் தெரிகிறது.
இந்நிலையில், ஒரு டி.வி. நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நயன்தாராவிடம் சில கேள்விகள் கேட்டுள்ளனர்.
அப்போது நயன் கையில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு இது நிச்சயதார்த்த மோதிரம். தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறியிருக்கிறார் நயன்தாரா.
Nayanthara talks about her engagement ring