தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் நடிகராக வளர்ந்துவிட்டால் எல்லா நடிகர்களுக்கும் ஒரு படத்தையாவது இயக்கி விட வேண்டும்… தயாரித்து விட வேண்டும் என்பது கனவாக மாறிவிடும் போல..
தற்போது இந்த ஆசை யோகிபாபுக்கு வந்துவிட்டதாம்.
தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரியின் 18 ரீல் புரொடக்ஷன் நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்க யோகி பாபு திரைக்கதை எழுதி வருகிறாராம்.
இது நாயகிக்கான கதை என்பதால் இவருக்கு கோலமாவு கோகிலா படத்தில் நாயகியாக நடித்த நயன்தாராவை நாயகியாக நடிக்க வைக்க முயற்சித்து வருகிறாராம்.
தற்போது மூக்குத்தி அம்மன் மற்றும் நெற்றிக்கண் என இரண்டு படங்களிலுமே நாயகியாக நடித்து வருகிறார் நயன்தாரா.
கொரோனா ஊரடங்குக்கு பின் யோகி பாபுவின் படத்தில் நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஒரு வேளை அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அடுத்த நாயகியை தேடும் முடிவில் இருக்கிறாராம் இந்த புதுமுக இயக்குனர் யோக பாபு.
ஒரு திறமையான ஏழை இளைஞன் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்று பணக்காரன் ஆகிறான் என்பது தான் கதையாம்.
(இது கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி கதையா இருக்கே.. என்கிறீர்களா..? )
Nayanthara will play the lead in Yogi Babus debut directorial