தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனியார் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கும்போதே சித்ராவுக்கு ரசிகர்கள் அதிகம். தன் புன்னகையால் ரசிகர்களை ஈர்த்தவர் அவர்.
அதன் பின்னர் சரவணன் மீனாட்சி, சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தும் ரசிகர்களை கவர்ந்தார் சித்ரா.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கேரக்டரில் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளார்.
இந்த நிலையில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை தன் சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது போட்டோ ஷூட் என முதலில் பலர் நினைத்தாலும் பின்னர் தான் அவருக்கு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தெரிய வ்நதுள்ளது.
விரைவில் சித்ராவின் திருமணம் நடைபெற வுள்ளது.
அதே போல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உள்ள மீனா என்ற கேரக்டரும் படு பிரபலம்.
இந்த கேரக்டரில் நடித்திருப்பவர் நடிகை ஹேமா. இவருக்கு வளைகாப்பு நடந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதைப்படி கர்ப்பமாக இருக்கும் ஹேமா, நிஜத்திலும் தான் கர்ப்பம் தரித்திருக்கிறாராம்.
ஹேமாவுக்கு வளைகாப்பு முடிந்திருப்பதால் இவர் சில காலம் சூட்டிங்கில் கலந்துக் கொள்ள மாட்டார் என கூறப்படுகிறது.