ஜிவி பிரகாஷ் படத்தில் பூனம் பஜ்வா-பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல ஒளிப்பதிவாளரான பாபா பாஸ்கர் தற்போது ஜி.வி. பிரகாஷ் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவிருக்கிறர்.

‘குப்பத்து ராஜா’ என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் பார்த்திபன் நடிக்கவிருக்கிறாராம்.

மேலும இப்படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் பூனம்பஜ்வா.

இவர் சுந்தர் சியின் ‘அரண்மனை 2’, ‘முத்தின கத்தரிக்காய்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷே இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

எடிங்கை பிரவீண் செய்ய, கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

Parthiban and Poonam bajwa teams up with GV Prakash for Kuppathu Raja

விஜய்ஆண்டனி-கிருத்திகா உதயநிதி கூட்டணியில் ‘காளி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எமன், சைத்தான் ஆகிய படங்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியானது.

இதனையடுத்து புதுப்படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தை உதயநிதியின் மனைவியும் வணக்கம் சென்னை படத்தின் இயக்குநருமான கிருத்திகா இயக்கவிருக்கிறார்.

இத்தகவலை இப்படத்தை தயாரிக்கும் பாத்திமா விஜய் ஆண்டனியே உறுதிப்படுத்தியுள்ளார்.

கனவு நிறைவேறியது.. அடிக்கல் நாட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் ரஜினி, கமல், சிவகுமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இதில் சற்றுமுன் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது…

நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் வேண்டும் என்ற கனவு இங்கு நிறைவேறி வருகிறது.

இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். இதற்கு பின்னால் நாங்களும் இருக்கிறோம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி. என்றார் சிவகார்த்திகேயன்.

‘எங்க குடும்ப விழா..’ நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் சிம்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் பல முன்னணி நடிகர்கள் பங்கேற்று வருகின்றனர்.

நடிகர் சங்க தேர்தலின் போது இப்போது பதவியேற்றுள்ள விஷால் அணியை கடுமையாக சாடியிருந்தார் சிம்பு.

இந்நிலையில் இன்று சற்றுமுன் அவரும் இவ்விழாவில் கலந்துக் கொண்டார்.

அப்போது சிம்பு பேசும்போது…

இது எங்கள் குடும்பம். இதுவொரு குடும்பத்தின் விழா.

ஒரு நல்ல காரியம் நடைபெறுகிறது. அதில் நான் கலந்து கொண்டது மகிழ்ச்சி.

இதை நல்ல முறையில் செயல்பட்டு வரும் நாசர், பொன்வண்ணன், விஷால், கார்த்தி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

இனி எல்லாமே வெற்றிதான்… ரஜினி பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் பல முன்னணி நடிகர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இவ்விழாவில் புதிய கட்டிடத்திற்கு ரஜினியும் கமலும் இணைந்து, அடிக்கல் நாட்டினர்.

அதன்பின்னர் ரஜினிகாந்த் பேசியதாவது…

இந்த கட்டிட அடிக்கல் நாட்டு விழா நல்லமுறையில் நடைபெற்று வருகிறது.

இது வெற்றி விழா. இனி எல்லாமே வெற்றிகரமாக நடைபெறும் என தெரிவித்தார்.

நடிகர்களின் கோட்டையாக சங்க கட்டிடம் அமையும்.. கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் பல முன்னணி நடிகர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இங்கு கமல் முன்பே வந்து கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது…

இந்த நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

இது கட்டிடமாக இருந்து மறுபடி கல்லாகி, பின் மறுபடியும் கட்டிடமாக உருவாகவுள்ளது.

நான் வைத்த செங்கல்லும் இந்த கட்டிடத்தில் இடம் பெறுகிறது என்பது எனக்கு மகிழ்ச்சி.

இது நடிகர்களின் கோட்டையாக அமையும் என்று தெரிவித்தார் கமல்.

More Articles
Follows