தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தமிழக முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார் மு.க.ஸ்டாலின்.
பதவியேற்றது முதல் பல்வேறு நல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை, வீடு தேடி வந்து மருத்துவம் என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்..
“அன்பிற்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் அரசியல் செய்ய வேண்டும்.
ஆனால் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக்கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள்.
உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள் உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கம் அளிக்கும் விதத்தில் உள்ளது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் மு.க. ஸ்டாலினை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
Pawan Kalyan talks about TN CM Stalin