தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எஸ்ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா நடித்த ‘சுக்ரன்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி.
இதன் பின்னர் பல சூப்பர் ஹிட் பாடல்களை பல படங்களுக்கு கொடுத்தார்.
இதன்பின்னர் ‘நான்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
இதில் சசி இயக்கத்தில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் விஜய்ஆண்டனிக்கு பெரும் திருப்புமுனையானது.
இதனால் ‘பிச்சைக்காரன் 2’ படம் விரைவில் தயாராகும் என்றார். ஆனால் அதை சசி இயக்கவில்லை என்றார்.
அதாவது ‘பாரம்’ படத்தை இயக்கிய பிரியா கிருஷ்ணசாமி இயக்கப் போவதாக அறிவித்தனர்.
அதன் பிறகு என்ன ஆனதோ ‘கோடியில் ஒருவன்’ படத்தின் இயக்குனரான ஆனந்த் கிருஷ்ணா ‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்குவார் என்று தெரிவித்தனர்.
ஆனால், இப்போது விஜய் ஆண்டனியே பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
தற்போது ‘கோடியில் ஒருவன், தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நாயகனாக நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.
இசையமைப்பாளர், நடிகர், எடிட்டர் ஆகிய பணிகளைத் தொடர்ந்து தற்போது இயக்குனராகவும் தயாராகி விட்டார் விஜய் ஆண்டனி.
Pichaikkaran 2 movie will be directed by Vijay Antony