தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணிரத்னம் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்த படம் ‘பொன்னியின் செல்வன் 1 ‘.
பழம்பெரும் எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை கொண்டு இந்த படம் உருவானது.
இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி மொழிகளில் வெளியானது.
இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து 300 கோடியில் உருவான இந்த படம் உலக அளவில் 450 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்த இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, சரத்குமார், பிரபு, பார்த்திபன், ஜெயராம், அசோக் செல்வன், ஆதேஷ்பாலா உள்ளிட்ட பல நடித்திருந்தனர்.
இதன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி தற்போது லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘Ponniyin Selvan Part 2’ release date announced by Lyca