தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாக்யராஜ் இயக்கி நடித்த ‘வீட்ல விசேஷங்க’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரகதி.
விஜயகாந்துடன் பெரிய மருது, பாண்டியராஜனின் சும்மா இருங்க மச்சான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில் வெளியான இனிமே இப்படித்தான் படத்தில் சந்தானத்தின் அம்மாவாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் பிரகதி கொடுத்துள்ள அண்மை பேட்டியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒரு காமெடியனை பற்றி தெரிவித்துள்ளார்.
அதில்…
காமெடி நடிகர் ஒருவர் நன்றாக பழகினார். ஆனால் நாளடைவில் அவரது பேச்சும் செயலும் சரியாக இல்லை.
எனவே அவரை கேரவனுக்குள் அழைத்து பேசினேன்.
தவறான முறையில் என்னை அணுக சிக்னல் கொடுத்தேனா? அல்லது எனது உடல் மொழி உங்களை அழைப்பதுபோல் இருந்ததா?
சூட்டிங்கில் திட்டி இருப்பேன். உங்களுக்கு இருக்கும் மரியாதையை கருத்தில் கொண்டு தனியாக சொல்கிறேன் என்றேன்.
அதன் பிறகு அவர் என்னிடம் மோசமாக நடந்து கொள்ளவில்லை”. என பிரகதி தெரிவித்துள்ளார்.
அந்த காமெடியன் யாரோ? என்பது தெரியவில்லை.
Pragathi recalls Comedy Actors misbehavior with her