தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
பாலிவுட்டில் ஷாருக்கான் – தீபிகா படுகோன் இணைந்து நடித்துள்ள படம், ‘பதான்’.
சென்னை எக்ஸ்பிரஸ் ஜோடி இந்த படத்திலும் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவான நிலையில் ‘பேஷரம் ரங்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.
அதன்பிறகு தான் வட இந்தியாவில் சர்ச்சை எழுந்தது.
நாயகன் ஷாருக், பச்சை நிற உடை அணிந்தும் நாயகி தீபிகா காவி நிற பிகினியில் கவர்ச்சியாக உடையணிந்து இருந்தனர்.
எனவே காவி நிறம் அவமதிக்கப் பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தைரியமாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அயோத்தியின் ஹனுமன் காரி மட தலைவர் ராஜு தாஸ் என்பவர் தன் எதிர்ப்பை கடுமையாக தெரிவித்துள்ளார்.
அவர் ‘‘இந்த காவி உடை கவர்ச்சி மத உணர்வை புண்படுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘பதான்’ எங்கெங்கு திரையிடப்படுகிறதோ அந்த தியேட்டர்களை தீயிட்டு கொளுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.